தலைப்பில்லா கவிதைகள்

தலைப்பில்லாத கவிதையாய்
நீயும் நானும் இங்கே
அங்கீகாரம் இல்லாததாலயே
அலைக்கழிப்பாய் நம் காதல்

யார் யாரிடமோ
அங்கீகாரம் கேட்டபடி
திசை தெரியா பறவைகளாய்
காத்து நிற்கும் தருணங்களில்
நம் காதலும்
வெட்கப்பட்டதடி அவமானத்தால்

என்னதான்
எதிர்பார்ப்புகள் இவர்களுக்கு என
கேள்விகள் கேட்பவளே
அது தெரியாமல் தானே
குருட்டு மனிதன்
ஓவியம் வாங்கும் அவலமாய்
உன்னோடு நானும்

சத்தமின்றி
முத்தமிட்டு சென்றவளே
சத்தமாய்
உறவுகளிடம் பேசாததுதான் தவறோ

மழலையாய்
நீ ஸ்பரிஷத்த நிமிடங்கள்
நீண்ட இரவுகளில்
கண்ணீரோடு நனைகிறதடி தலையணையில்

கல்யாண மாலைகளுக்கு
பூத்தொடுக்க மறுப்பவர்கள்
காதலர் கல்லறைகளுக்கு மட்டும்
மலர் வளையங்களுடன் தயாராய்...


14 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

Tech Shankar said...

கவிதை நல்லா இருக்கு. பட்டாம்பூச்சி விருதை வழங்கியமைக்கு நன்றி. வால்பையன்+ ஜீவா இணைந்து வழங்கியதாக ஏற்றுக்கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி

நட்புடன் ஜமால் said...

\\குருட்டு மனிதன்
ஓவியம் வாங்கும் அவலமாய்
உன்னோடு நானும்\\

இரசித்த வரிகள்

நட்புடன் ஜமால் said...

\\மழலையாய்
நீ ஸ்பரிஷத்த நிமிடங்கள்
நீண்ட இரவுகளில்
கண்ணீரோடு நனைகிறதடி தலையணையில்\\

காதல் வலிகள் சொல்லும் வரிகள்

ஆ.சுதா said...

//குருட்டு மனிதன்
ஓவியம் வாங்கும் அவலமாய்
உன்னோடு நானும்//


//மழலையாய்
நீ ஸ்பரிஷத்த நிமிடங்கள்
நீண்ட இரவுகளில்
கண்ணீரோடு நனைகிறதடி தலையணையில்//

//கல்யாண மாலைகளுக்கு
பூத்தொடுக்க மறுப்பவர்கள்
காதலர் கல்லறைகளுக்கு மட்டும்
மலர் வளையங்களுடன் தயராய்...

வரிகள் வலிகளோடு உள்ளது
கடைசி வரிஇ நச் என்று உள்ளது

அமிர்தவர்ஷினி அம்மா said...

//கல்யாண மாலைகளுக்கு
பூத்தொடுக்க மறுப்பவர்கள்
காதலர் கல்லறைகளுக்கு மட்டும்
மலர் வளையங்களுடன் தயராய்...

முந்தைய கவிதையில் சுயம்பாய் முளைப்பேன் என்று சொல்லிவிட்டு,
இதென்ன தோழரே...

காதல் என்றால் வலிகள் நிச்சயம்.
இந்தக் காதல் கவிதை முழுக்க வலிகள் சொல்கிறது.

வேலன். said...

கல்யாண மாலைகளுக்கு
பூத்தொடுக்க மறுப்பவர்கள்
காதலர் கல்லறைகளுக்கு மட்டும்
மலர் வளையங்களுடன் தயராய்...//

அருமையான வரிகள்...அழகான கவிதை.

தயராய்:-தயாராய் என நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

jeevanulla varigal thalaippu illathu ponaalum thaakiyadhu nenjathai.....unmaiai sonna unarvugal

Anonymous said...

jeevanulla varigal thalaippu illathu ponaalum thaakiyadhu nenjathai.....unmaiai sonna unarvugal

Shakthiprabha said...

//தலைப்பில்லா கவிதைகள்//

கவிதைத் தலைப்பே (தலைப்பில்லாத் தலைப்பு) அத்தனையும் கூறிவிடுகிறது. மிகவும் ரசித்தேன்.

Suresh said...

அருமை தோழா நானும் முத்துக்குமாரேட ஒரு சமீப பேட்டி பதிவு போட்டு இருக்கிறேன் வந்து பாருங்க

KarthigaVasudevan said...

உறவுகளிடம் மட்டும் என்று இல்லை,
எந்த இடம் என்றாலும் நமது நியாயத்தை நாமே உரக்கச் சொல்லா விடினும் வலிமையாக சொல்ல மறந்தொமென்றால் இழப்பு நமக்குத் தான்.அது காதலானாலும் சரி கல்வியானாலும் சரி உத்யோகமேன்றாலும் சரி ...கல்யாணமென்றாலும் சரி.
அர்த்தமுள்ள வரிகள் ...வாழ்த்துக்கள் .

sakthi said...

என்னதான்
எதிர்பார்ப்புகள் இவர்களுக்கு என
கேள்விகள் கேட்பவளே
அது தெரியாமல் தானே
குருட்டு மனிதன்
ஓவியம் வாங்கும் அவலமாய்
உன்னோடு நானும்

wow
arumainga

superb

sakthi said...

கல்யாண மாலைகளுக்கு
பூத்தொடுக்க மறுப்பவர்கள்
காதலர் கல்லறைகளுக்கு மட்டும்
மலர் வளையங்களுடன் தயாராய்...
chance ee ilai
nice lines

பரிசல்காரன் said...

நல்லாருக்கு ஜீவா!