கண்ணீர் தூதாய்

மௌனமாய் அழுதபடி
முகம் பார்க்க முடியா

தூரங்கள் தொலைவாய்
காத்திருக்கும் தேவதைக்கு
கண்ணீர்துளிகள் காதல் தூதாய்
கனவுகளில் நீங்களாவது
தேவதையிடம் சொல்லிவிட்டு வாருங்கள்
இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் ஜீவன்
கையாலாகதவனாய் கவிதைகள் கிறுக்கியபடி...

3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

தேவதையின் காரணமாக

எங்களுக்கு கிடைத்தது நல் வரிகள்

ஆனால் தேவதையே

ஜீவனுக்கு ஜீவன் கிடைத்தால்

கவிதையில் ஜீவன் வரும்

ஆ.சுதா said...

கண்ணீரில் நனைகின்றது கவிதை.
ஏன் ஜீவா எப்போதும் உங்கள் கவிதையில் ஒரு கண்ணீர் துளி இருந்துக் கொண்டே இருக்கின்றது.
வரிகள் நல்லாயிருக்கு

sakthi said...

arumai