நானாய் சுயம்பாய்

அடேய்! நான் என்பவன்
கலங்கினானே ஏனடா தோழா

முத்தெடுக்க பிறந்தவன்
தவளையின் கதறல்கள் கேட்டா
உன்னுள் கலங்கினாய் நீ

விண்ணாளும் இராஜாளி
சிட்டுகுருவி சிறகொடிதல் கண்டா
கண்ணீரில் முழ்கினாய் நீ

போர்க்கள படைத்தளபதி
இரத்தகறை பார்த்தா
வாளை துக்கி எறிந்தாய் நீ

காற்றின் விண்மீன்
மிரட்டிய சுறாவளி கண்டா
விண்மீனாய் மாறினாய் நீ

மரணத்தின் வலி கண்டு
கனவுகள்,காயங்களோடு மீண்டவன்
அத்தனை சுலபமாய்
வீழ்த்திட முடியாது என்னை
இதோ இந்த கணம்
நான் என்பவன் போரிட தயார்

நான் என்பவன் சுயம்பு
கவனிப்பாரற்று ஒதுங்கி கடந்தாலும்
நானாய் முளைப்பேன் சுயம்பாய்...


6 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

ஆ.சுதா said...

//விண்ணாளும் இராஜாளி
சிட்டுகுருவி சிறகொடிதல் கண்டா
கண்ணீரில் முழ்கினாய் நீ//

இவ்வரியை வேறு யோசித்திருக்களாம்
ஏனென்றால் இது வீரத்தை குறிப்பதாய் இல்லை இரக்கத்தை குறிப்பதாய் பொருள் படும்.

//போர்க்கள படைத்தளபதி
இரத்தகறை பார்த்தா
வாளை துக்கி எறிந்தாய் நீ//

நான் என்பவன் சுயம்பு
கவனிப்பாரற்று ஒதுங்கி கடந்தாலும்
நானாய் முளைப்பேன் சுயம்பாய்...

இவ்வரிகள் கச்சிதம்

நட்புடன் ஜமால் said...

\\நான் என்பவன் சுயம்பு
கவனிப்பாரற்று ஒதுங்கி கடந்தாலும்
நானாய் முளைப்பேன் சுயம்பாய்...\\


நானாய் முளைப்பேன் ‘நானும்'

வேலன். said...

கவிதை அருமை...தாங்கள் கவிதைகளில் அதிகம் சோகம் ஏன்?

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஜீவா said...

என் தோழமை முத்து,ஜமாலுக்கு

தங்களின் பின்னுட்டத்திற்கு நன்றிகள்,மனதில் பாதித்தவை எனக்கு தெரிந்த வார்த்தைகளில் பதிவிட முயலுகிறேன் , முயற்சி செய்கிறேன் இன்னும் வார்த்தைகளை செம்மையாக்குவதற்கு.

தோழமையுடன்
ஜீவா

ஜீவா said...

தோழமை வேலன்

தங்களுக்கு தனியே மடல் எழுதுகிறேன்


தோழமையுடன்
ஜீவா

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் என்பவன் சுயம்பு
கவனிப்பாரற்று ஒதுங்கி கடந்தாலும்
நானாய் முளைப்பேன் சுயம்பாய்...

ப்ப்பா, ஆழ்ந்த வரிகள்.

அருமை, வார்த்தைகளின் பின்னிருக்கும் வலி....க்கு
ஆறுதலேதும் இல்ல.