சபிக்கப்பட்டவனாய்


நிலாப்பெண்ணின் விசும்பல்களில்
மொட்டை மாடி கவிதைகள்
வானம் பார்த்தபடி வெறுமையாய்

கனவுப்பெண்ணின் கண்ணீரில்
இரவுத் தூக்கங்கள்
கனவுகள் இன்றி மரணமாய்

மனம் பிழியும் சுமைகளாய்
என் கவிதைகள் கணக்கிறது
தாள்களை எறித்துவிடுகிறேன்
யாராவது கவிதைகளை
எடுத்து தொலைத்துவிடுங்களேன்

பெண்மையை காயப்பட்ட பொழுதுகளிலும்
எனை இமைக்குள் இருத்தியவளே
தேவதைகளின் கண்ணீர் துளிகள்
பூமிக்கு சாபங்களாம்
சபிக்கப்பட்டவனாய் நானும் தோழி ...


2 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

வருக ஜீவா நலம் தானே!

--------------

கனவுகள் இன்றி மரணமாய்

துக்கம் சொல்லும் வரி

ஜீவா said...

நன்றி ஜமால்,
இத்தனை நாட்களுக்கு பிறகும் என்னை மறக்காமல் இருப்பதற்கு,