அட்சய கவிதையாய் நீ!

கேள்விகள் கேட்கிறயாய்
நம் திருமணத்திற்கு பின்பு
காதல் கவிதைகள் எங்கேயென ?
காதல் தீர்ந்ததா ?
காதலித்தவன் தொலைந்தானா என ?
அட்சய பாத்திர சொந்தக்காரனுக்கு
எப்பொழுதும் பசிப்பதில்லை
என் காதல் தேவதையே ...

6 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜீவா :). அட்சய பாத்திரம் வெச்சு இருக்கறவங்களுக்கு பசிக்காதுதான். ஆனா யாசகம் கேட்கறவங்களுக்கு பசிக்குமே. இனியாவது அடிக்கடி கவிதை விருந்து போடுங்க :)

குடந்தை அன்புமணி said...

இந்த கவிதை தரும் அனுபவத்தை நான் நிஜத்தில் பெற்றிருக்கிறேன் நண்பா... வாழ்த்துகள்.

ஜீவா said...

நன்றி தாரணி பிரியா, இன்னும் என்னை மறக்காமல் பின்னுட்டமிட்டதிற்கு :).
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஜீவா said...

நன்றி அன்புமணி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வேலன். said...

சாரி ஜீவா சார்...நீண்ட நாட்களாக தாங்கள் பதிவிடாததல் உங்கள் ்பக்கம் வரஇயலவில்லை...மீண்டும் பழையபடி கவிதைகளை எதிர்பார்க்கின்றேன்.வாழ்க வளமுடன்.வேலன்.

இரசிகை said...

M.......NICE!