இப்பொழுதெல்லாம்
மனசு எதிபார்பதேயில்லை
தீபாவளி பட்டாசு சப்தங்களை
பாகம் பிரிப்பதென்று
பட்டாசு திருடுதலையும்
எண்ணெய் குளியலுக்கு பின்பு
புத்தாடை வரவையும்
உறவினர்கள் வாழ்த்துக்களுடன்
பை சேரும் காசுகளையும்
முதிர்ந்த வயதும்
தெளிந்த மனதும்
காரணங்கள் என்றாலும் கூட
வாழ்க்கை ஓட்டத்திற்காக
தொலை தேசத்தில் தங்கிய
சகதோழன்
சகோதரனின் பிரிவும் முக்கியமாய்...
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய்
Subscribe to:
Post Comments (Atom)
11 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
\\வாழ்க்கை ஓட்டத்திற்காக
தொலை தேசத்தில் தங்கிய
சகதோழன்
சகதோரனின் பிரிவும் முக்கியமாய்...\\
மிக்க நன்றி
எங்களுக்காக உள்ளதாய் கொள்கிறேன் இவ்வரிகளை.
thanks Jamaal . again you have commented to me .befor really i was missed you and comments
thanks to you
//தொலை தேசத்தில் தங்கிய
சகதோழன்
சகதோரனின் பிரிவும் முக்கியமாய்...\\
இப்படி பிரிவு சிலசமயம் நம்மை
சுற்றியிருப்பவர்களையெல்லாம்
மறைத்து விட்டு தனிமை படுத்திவிடும்
நல்ல கவிதை.
தீபாவளீ நேரக் கவிதையா??? அருமைங்க.
பிரிவுகூட முக்கியம்தான்!! நல்ல கருத்து!!
சின்ன வயசுல தீபாவளி அப்ப செஞ்ச குறும்புகள் எல்லாம் ஞாபகம் வருது
பண்டிகை வரும்போது அவங்களை லீவு எடுத்துட்டு வர சொல்லுங்க. சேர்த்து கொண்டாடிலாம்,
அருமையான கவிதை...சகதோழன்-
சகதோரனின் -
சகதோழன்
சகோதரனின்- வரும் என நினைக்கின்றேன்.
புகைப்படம் அருமை.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி முத்துராமலிங்கம், தொடரும் உங்களின் ஆதரவுக்கு
ஆதவா சின்ன வயசில எழுதினது :)
தாரணி ,என்னுடைய இரட்டை சகோதரன் லீவு எடுத்துட்டு வர அளவு நல்லவன் இல்லிங்க :)
வேலன் எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும் , இப்ப திருத்திவிட்டேன் .தொடர்ந்து வரும் உங்களின் வாசிப்புக்கு நன்றிகள்
சிறு பறவையாய்....
கவிதைக்கான பின்னுட்டம்
இதை அங்கே இட முடியவில்லை.
எனக்கு எது நேர்ந்தாலும்,அல்லது என்னால் எது நேர்ந்தாலும்
கவலையின்றி சிறகடிப்பேன்! எல்லோருக்கும் இந்த மனது
கிடைக்கட்டும்!
Post a Comment