எனை கேலி செய்திடு
மரணத்தின் எல்லை தொடுமளவு
சிலநேரம் என்னுள் உறங்கிடும்
மிருகத்தின் வால் முறுக்கி
என் கனவு தோட்டத்தின்
வேலியுடைத்து நாசம் செய்து
கண்ணீரின் கொள்ளவு தீரும்வரை
அழுகை முட்டி
என் முகமுடி கழட்டி
நிஜ முகம் காட்டி
சந்தோச சாம்பலின் உள்ளிருக்கும்
துக்க சாம்பலை கிளறிவிட்டு
என் விடுகதை வாழ்க்கையின்
விடைக்கான கேள்வி கேட்டு
எதிர்கால வாழ்க்கை பயத்தின் மீது
கொக்கி போட்டு இழுத்து
எப்பொழுதாவது எழும் ஆசைகளின்
நிராசை தடம் காட்டி
சுவாதித்தலை மறக்குமளவு
கேலியாய் இழிந்து பேசினாலும்
நானாய் ஜனனித்திருப்பேன்
நீரின் அடிமட்டம் வரை
அகங்காரமாய் அழுத்தினாலும்
ஆக்ரோஷமாய் மேலெழும்பும் பந்தாய்...
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய்
Subscribe to:
Post Comments (Atom)
6 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
ஒவ்வொன்றும் நம்பிக்கை வரிகள். மற்றவர்களின் கேலி பேச்சால் நொந்து இருக்கிற மனதுக்கு ஆறுதல் அளிக்கிற அதைவிட நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் (எனக்கு உள்பட). எனக்கு மட்டும் ஏனிப்படி என்று புலம்பும் என் தோழி ஒருத்திக்கு இந்த முகவரி தந்தேன். அவள் சார்பாக நன்றிகளும்.
//நீரின் அடிமட்டம் வரை
அகங்காரமாய் அழுத்தினாலும்
ஆக்ரோஷமாய் மேலெழும்பும் பந்தாய்...
///
இந்த வரிகளில் இருக்கும் துடிப்பு மற்ற வரிகளில் இல்லையே?
தாரணி பிரியாவுக்கு உங்களின் வார்த்தைகளுக்கு நன்றிகள்.
இந்த வரிகளில் இருக்கும் துடிப்பு மற்ற வரிகளில் இல்லையே? ///
தோழமை மாதவராஜ்க்கு ,முதலில் நன்றி சின்னதாய் பாரட்டியதற்கு :)
இக்கவிதை எனது 17வது வயதில் (9வருடங்களுக்கு முன்பு) ஏதோ எழுதியது,
இன்னும் வெறும் மாணவனாகத்தான் பதிவிடுகிறேன் , எனை பாதித்தவைகளை எனக்கான பார்வைகளாய் ,வார்த்தைகளாய் பதிவு செய்கிறேன். நீங்கள் கூறுவதுபோல் முயற்சி செய்கிறேன் இன்னும் வார்த்தைகளை செம்மையாக்குவதற்கு,
தொடர்ந்து தங்களின் உரிமையான கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
சுவாதித்தலை மறக்குமளவு
கேலியாய் இழிந்து பேசினாலும்
நானாய் ஜனனித்திருப்பேன்
நீரின் அடிமட்டம் வரை
அகங்காரமாய் அழுத்தினாலும்
ஆக்ரோஷமாய் மேலெழும்பும் பந்தாய்...
எப்பொழுதாவது எழும் ஆசைகளின்
நிராசை தடம் காட்டி //
மனசை தட்டும் கவிதை.
அதுவும் அந்த கடைசி வரிகள் கவிதை அல்ல விதை.
ஆக்ரோஷம் பந்துக்கு மட்டுமா ?
hi Amithu amma ,thanks :)
Post a Comment