படுக்கையறைகள் பார்வைக்கு

நட்ட நடு வீதீயில்
படுக்கையறைகள் பார்வைக்கா ?
காதலர் தின
வாழ்த்து அட்டைகளுடன்
வெளிதனில் கட்டிபிடித்த முத்தங்களும்
கடற்கரை மதிய நேரத்து
சுடு மணலில் அணைப்புகளும்
சத்தமின்றி கற்பழிக்கிறது
காதலெனும் மெல்லிய உணர்வை...

5 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\சத்தமின்றி கற்பழிக்கிறது
காதலெனும் மெல்லிய உணர்வை...
\\

அருமை ஜீவா.

ஆ.சுதா said...

//சத்தமின்றி கற்பழிக்கிறது
காதலெனும் மெல்லிய உணர்வை...//

நல்ல வரிகள்
ஜூவா

Murli said...

இது போறாமையில் எழுதிய வரிகளோ.....

வல்லிசிம்ஹன் said...

இதே சிந்தனைதான் எனக்கும். கடற்கரையில் மதிய வெயிலில்
நடக்கும் அட்டகாசங்கள்

கணக்கில வரதில்ல.

அவர்களின் ஆசைகளையோ வேற எண்ணங்களையோ நான் தப்புக் கண்டுபிடிக்கவில்லை.
இவ்வளவு பொது இடத்துல தான் அது நிறைவேறணுமா....

ஆதவா said...

இவர்களைப் போன்றவர்களால்தான் காதல் எனும் மென்மையே கொச்சையானது!!! நம் நாட்டில் காதலர் தின எதிர்ப்பும் இவர்களால்தான் உருவானது!!!

தக்க சமயத்தில் தக்க கவிதை!!!

நான் முன்னொரு காலத்தில் எழுதினேன்..

எட்டிப் பார்க்கும்
அலைகளுக்காகவேனும்
கட்டிப் பிடிப்பதை
நிறுத்துங்கள்!!!!

தொடருங்கள்!!!