அடிபெண்ணே
நீ முன்பு போல்
முகம் புதைத்தே சென்றிருக்கலாம்
நீ முகம் தூக்கி
விழியிரண்டை பார்த்தது முதல்
ஆரம்பமானது எனது இராகுகாலம்
நீ மட்டுமே முக்கியமாய்
முக்கியமானதாய் நீ மட்டுமே
செலவிட்ட செல்லா காசையும்
கணக்கிட்டாடல் செல்லாதவனாய் நானடி
நீ தென்றலென
கனவுகளில் எனை தொலைத்தேன்
புயலாய் வாழ்க்கையை பறித்தது புரியாமல்
சிறு பிள்ளைகள்களாய்
அர்த்தங்கள் ஏதுமின்றி மறைவாய்
கதைகள் பலபேசி சிரித்தோம்
இங்கு யாரை யார் முட்டாளாக்கியது?
நம்மிடையில் குறுக்கிட்ட சிறுவனையும்
வில்லனாய் பார்த்தோம்,எதிர்த்தோம்
நாம் மட்டுமே உறவென திரிந்தோம்
லட்சியங்களை எல்லாம்
பசியின்றி தின்று செரித்து
மயக்கமாய் கண்மூடாமல் உறங்கினோம்
காதல் அலுத்த பின்பு
நீயொரு காரணம் சொன்னாய்
நானொரு காரணம் சொன்னேன்
பின் பிரிந்தோம் -இடையில்
வாழ்க்கை,தூக்கத்தை
பறித்து சென்றதை தவிர
பொய்க்காதல் வேறென்றும் செய்யவில்லையடி...
அடையாளங்கள்: கவிதைகள் என்பதாய், காதல் வரிகள்
Subscribe to:
Post Comments (Atom)
8 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
நீ முகம் தூக்கி
விழியிரண்டை பார்த்தது முதல்
ஆரம்பமானது எனது இராகுகாலம் \\
சிரிப்பு வருது ஜீவா
நீ தென்றலென
கனவுகளில் எனை தொலைத்தேன்
புயலாய் வாழ்க்கையை பறித்தது புரியாமல்\\
வார்த்தைகள் அழகு ஆனால் வலியுடன்
ஏன் ஏன் ஏன் ஜீவா
நம்மிடையில் குறுக்கிட்ட சிறுவனையும்
வில்லனாய் பார்த்தோம்,எதிர்த்தோம்
நாம் மட்டுமே உறவென திரிந்தோம்\\
அழகு காதல்
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
நீ தென்றலென
கனவுகளில் எனை தொலைத்தேன்
புயலாய் வாழ்க்கையை பறித்தது புரியாமல்//
அழ்கிய வரிகள்
தேவா........
பின்னுட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் :)
தோழமையுடன்
ஜீவா
ஏன் ஏன் ஏன் ஜீவா ///
சும்மா தான் ஜமால் :)
yetharthathai kavithaiai sonnergal...poikathal endrai marukiren unmaikathal enbathal thaan innum thookam tholainthu...vizhigal vizhithirukindrana....vizhithoongum neram kuda.....nice ya
Post a Comment