எப்போது விலகினேனடி


உறுத்தும் வியர்வை வாடையோடு
மணிக்கணக்கில் பேசுவாய்
அப்போதும் விலகியதில்லை

சுவாரஸ்யமாய் பேசுகையில்
"ஆ" வென சோம்பலிடுவாய்
அப்போதும் விலகியதில்லை

உனக்கு இதுகூட தெரியாதாதென
ஏளனமாய் சிரித்துடுவாய்
அப்போதும் விலகியதில்லை

அவன் இவன் அப்படியென
ஒப்பீடுகள் செய்திடுவாய்
அப்போதும் விலகியதில்லை

என் நட்பை துச்சமாக்கி
உன் நண்பர்களிடம் மறைப்பாய்
அப்போதும் விலகியதில்லை

பேருந்தின் பயண நெரிசலில்
எவனோ செய்த சில்மிஷத்திற்கு
சட்டென யோசிக்காமல் -எனை
திரும்பி பார்த்த நேரத்தில்தான்
இயல்பாய் விலகியது உன்னிடமிருந்து...

12 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\என் நட்பை துச்சமாக்கி
உன் நண்பர்களிடம் மறைப்பாய்
அப்போதும் விலகியதில்லை\\

மிகவும் சிரமமானது.

நட்புடன் ஜமால் said...

\\பேருந்தின் பயண நெரிசலில்
எவனோ செய்த சில்மிஷத்திற்கு
சட்டென யோசிக்காமல் -எனை
திரும்பி பார்த்த நேரத்தில்தான்
இயல்பாய் விலகியது உன்னிடமிருந்து...\\

வலியோடு கூடிய விலகல் ...

ஜீவா said...

தொடர்ந்து எனது படைப்புகளை படிப்பதற்கும்,பின்னுட்டத்திற்கும் நன்றி ஜமால்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனை
திரும்பி பார்த்த நேரத்தில்தான்
இயல்பாய் விலகியது உன்னிடமிருந்து...

ம், கொஞ்சம் வலிதான், இருந்தாலும்,
ஏற்றுக்கொள்ளலாம்.

நல்ல கவிதை

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் மதி

மேல உள்ளவரின் பதிவை போய் பாருங்கள்

விருது

தேவன் மாயம் said...

உறுத்தும் வியர்வை வாடையோடு
மணிக்கணக்கில் பேசுவாய்
அப்போதும் விலகியதில்லை///

இதை கண்டு பிடித்து டியோ ஸ்ப்ரே
அடிக்க ரொம்ப நாளாச்சு

தேவா..

தேவன் மாயம் said...

விலகல், பிரிவு,
மன வலிதான்

தேவன் மாயம் said...

ஜீவன்
இதுதான்
உங்கள்
பதிவா?

ஜீவா said...

ஜமால் நண்பர்,அமித்து அம்மாக்கு நன்றிகள் பல,,

ஜீவா said...

தேவன் நீங்கள் எந்த ஜீவனாய் நினைத்து பார்க்கிறிர்கள் ,,,,

மாதவராஜ் said...

ஜீவன்!

தொடர்ந்து உங்கள் கவிதைகளை படிக்கிறேன்.
காதலுக்காகவே ஒரு வலைப்பக்கம் தொடங்கியது போல எழுதி வருகிறீர்கள்.

ஜீவா said...

ஹா ஹா .நன்றி மாதவராஜ் .தெரிந்ததை செய்கிறேன் :) உங்களின் கட்டுரைகள் மிக அழகாக உள்ளது