என் முதல் தோழி
இனிய அம்மாவுக்காக
உனக்கு அனுப்பபடாமலே
என்னுள் பாதுகாக்கப்பட்ட
உனக்காக மடல் இது
எப்படி,எவ்விதம் ஆரம்பிப்பது
உனது துக்க சுவடுகளை
சந்தோச நிகழ்வுகளை விசாரித்தபடியா
இல்லை இல்லை இது
மரணத்தில் வாசலில் நின்று
எனைமீட்ட தாய்மையுடனான பகிர்தல் இது
என்னால் என் பிள்ளைக்கும்
வெறுப்பின்றி செய்தல் இயலுமா
நீ செய்த பணிவிடைகளை
எப்படி முடிந்ததது உன்னால்
20 வயது மகனுக்கு
2 மாத மழழையாய்
முகச்சுழிப்பின்றி கழிவுகள் அகற்றியது
உன் சின்னசிறிய சேமிப்பும்
பூதம் விழுங்கிய
கைப்பிடி சோறாய் கரைகையில்
உன் உயிர் விற்க துணிந்தாய்
உனக்கான சின்னஞ்சிறு கனவுகள்
கலைந்து போகையிலும்
எந்த தேசத்திற்கும்
தன்னந்தனியாய் பயணித்தாய்
எனை காப்பாற்ற முடியுமெனில்
உனக்காக
நான் எதுவும் செய்ததில்லை
எரிமலையின் கசடுகளை
எனையறியாமல் தந்ததை தவிர
தாய்மைக்கு
நன்றிகள் சொல்வது இயல்பல்ல
எனினும் நன்றிகள் பல உனக்கு
உனக்ககாவேணும்
உனது கனவுகளுக்காகவேணும்
உயிர் வாழ்தல் அவசிமாகிறது....
அடையாளங்கள்: அம்மாவுக்காக, கவிதைகள் என்பதாய்
Subscribe to:
Post Comments (Atom)
11 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
\\"முதல் தோழி அம்மாவுக்காக"\\
சரியான தலைப்பு ...
\\21 வயது மகனுக்கு
2 மாத மழழையாய்
முகச்சுழிப்பின்றி கழிவுகள் அகற்றியது
\\
அதுதான் தாய்மை ...
\\தாய்மைக்கு
நன்றிகள் சொல்வது இயல்பல்ல\\
இயலாததும்கூட ...
மிக அருமை ஜீவன்.
தாய்க்காக எதை செய்தாலும் தகும்
அருமையான மடல்....
அன்புடன் அருணா
அருமையா எழுதியிருக்கீங்க...
ஜமால் ,அருணா ,சின்ன பையனுக்கு நன்றிகள்
தாயின் அன்புக்கு இணையில்லை ஆனால் அந்த உறவுதனை விட்டு தொலைவில் இருப்பது தான் கொடுமை. ஓடி ஓடி உழைத்து விட்டு சிறிது சிந்தித்தால் நாங்கள் இழந்தது தான் அதிகம்
என் முதல் தோழி
இனிய அம்மாவுக்காக
அம்மாவே தோழியாக // நினைத்தாலே இனிக்கிறது.
உனக்கான சின்னஞ்சிறு கனவுகள்
கலைந்து போகையிலும்
எந்த தேசத்திற்கும்
தன்னந்தனியாய் பயணித்தாய்
எனை காப்பாற்ற முடியுமெனில்//
அதுதானே தாய்மை, தன்னை விற்று தன் குழந்தையை காப்பாற்றும் தியாகத்தில் தான் இன்னும் பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது.
அருமை
//உனக்காக
நான் எதுவும் செய்ததில்லை
எரிமலையின் கசடுகளை
எனையறியாமல் தந்ததை தவிர//
ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் வரிகள்... அற்புதம் சார்..
nanba nalama?
thaaimai pola thaayum varamey thaalutu yellorukkum vaaipadhu illai.......romba pedichi erukku...konjam imaigalai eeramaakiyadhu unmaiye...
Post a Comment