தாயுமானவனாய்

என் தேவதைக்கு
ஒரு கடிதம்

தூக்கம் தொலைத்த இரவுகளில்
யாருமற்ற பொழுதுகளில்
கண்ணிரீல் நனைத்தபடி கடிதம்

"6" வருடங்களாய்
காத்திருக்கும் நிமிடங்களில் எல்லாம்
இன்னும் இன்னும் காதலாய்

ஷ்பரிஷங்கலின்றி
சந்திப்புகள் ஏதுமின்றி
நகரும் நாட்களும்
உன் குரல் கேட்டகாமல்
உறைந்து போகிறது வெறுமையாய்

இன்னும் எத்தனை நாட்கள்
அர்த்தமற்ற உறவுகளின்
ஏதுமற்ற பேச்சுகளுக்கு
முடிவுகளற்ற விளக்கயுரை எழுதியபடி

வந்துவிடு கண்மணி
கண்னுக்குள் காத்திடுவேன்
உயிர்த்துளியாய் ஒவ்வொரு நிமிடமும்

சேலை தலைப்பின்
நுனி பிடித்தபடி உறங்கிடும்
கனவு எப்பொழுது நிஜமாகுமடி

காத்திருப்போம் காதலுடன்
நாம் நேசித்த
அழகான அந்த பட்டாம்பூச்சி
நிச்சயம் தோள்மீது வந்தமரும்

எதிர்த்திடும் உறவுகளுக்கு
சொல்லடி செல்ல குழந்தையே
எனையன்றி யாரடி
உனக்கு தாயுமானவனாய் ..

8 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\"தாயுமானவனாய்"\\

இதுவே ஒரு சிறந்த கவிதை ...

அப்படி வாழ்ந்தால்

நட்புடன் ஜமால் said...

\\"6" வருடங்களாய்
காத்திருக்கும் நிமிடங்களில் எல்லாம்
இன்னும் இன்னும் காதலாய்\\

காதல் இருக்க இருக்க
காத்திருத்தல்
(அவளையும் - அவளுக்காகவும்)

இருக்கும் ...

நட்புடன் ஜமால் said...

\\ஷ்பரிஷங்கலின்றி
சந்திப்புகள் ஏதுமின்றி
நகரும் நாட்களும்
உன் குரல் கேட்க்காமல்
உறைந்து போகிறது வெறுமையாய்\\

நானும் உணர்ந்திருக்கேன் இதை

எழுதத்தான் தெரியவில்லை

நட்புடன் ஜமால் said...

\\இன்னும் எத்தனை நாட்கள்
அர்த்தமற்ற உறவுகளின்
ஏதுமற்ற பேச்சுகளுக்கு
முடிவுகளற்ற விளக்கயுரை எழுதியபடி

வந்துவிடு கண்மணி
கண்னுக்குள் காத்திடுவேன்
உயிர்த்துளியாய் ஒவ்வொரு நிமிடமும்\\

ஆம் வந்துவிடு கண்மணி
என் நண்பனை காண

நட்புடன் ஜமால் said...

\\சேலை தலைப்பின்
நுனி பிடித்தபடி உறங்கிடும்
கனவு எப்பொழுது நிஜமாகுமடி

காத்திருப்போம் காதலுடன்
நாம் நேசித்த
அழகான அந்த பட்டாம்பூச்சி
நிச்சயம் தோள்மீது வந்தமரும்

எதிர்த்திடும் உறவுகளுக்கு
சொல்லடி செல்ல குழந்தையே
எனையன்றி யாரடி
உனக்கு தாயுமானவனாய் ..
\\

மிகவும் அருமை

தாயுமானவரே ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாயுமானவனாய் //

பாலகுமாரனுக்கு அடுத்தபடி இங்கே பார்க்கிறேன், படிக்கிறேன்.

காத்திருப்போம் காதலுடன்
நாம் நேசித்த
அழகான அந்த பட்டாம்பூச்சி
நிச்சயம் தோள்மீது வந்தமரும்

நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை

ஜீவா said...

இப்பொழுதுதான் பிளாக்கர் புதிது என்பதால் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றிகள் திரும்ப எப்படி சொல்வதுன்னு தெரியாம இருந்தேன் .அமிர்தவர்ஷினி அம்மா ,அதிரை ஜமால் க்கு நன்றிகள்

மாதவராஜ் said...

ஜீவன்!

//நாம் நேசித்த
அழகான அந்த பட்டாம்பூச்சி
நிச்சயம் தோள்மீது வந்தமரும்//

நல்லாயிருக்கு.

உங்கள் வலைப்பக்கமும் அழகாயிருக்கு.

வாழ்த்துக்கள்.
கூடவே புத்தாண்டு வாழ்த்துக்கள்.