கனவுத்தோழி

தேவை ஒரு சினேகிதி
என்னை போலவே கனவுகளோடு
ஆதாயம் தேடாத
நட்பாய் சிநேகிதி தேவை

வா சிநேகிதி
உன் வயதையொத்த
காமம் தேடாத தோழனாய்
என் முகவரியை அடையாமிடு

பெண் வாசனை
அறியாத எருக்கம் பூக்களாய்
எதிர்பால் நட்பறியாத
தோழன் நான்

தகுதிகள்
எதுவெல்லாம் வேண்டாம்-வேண்டும்
குறிப்புகள் தேவையில்லை
அறிந்துகொள் அது போதும்

கவிதையில் வாழ்பவன் நான்
நேசிக்காமலிருந்தாழும் பரவாயில்லை
கேலிகள் செய்யாதிரு

குழந்தையை வருடுபவன் நான்
கொஞ்சாம்லிருந்தாழும் பரவாயில்லை
அழுகை மூட்டாதிரு

ஆடம்பர வெறுப்புகள் உண்டு
அணிந்தாழும் பரவாயில்லை
ஆர்பாட்டமின்றி இரு

என்னோடு
நட்புகள் தொடரும் பொழுதுகளில்
என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா,,

என் வீட்டாரிடம்
இயல்பாய் நிகழும் அறிமுகம்
தயக்கங்கள் ஏதுமின்றி

அமாவசை இரவுகளில்
மின்சாரம் தடைபட்ட பொழுதுகளில்
தடையின்றி தொடரும் பேச்சுகள்
செறுப்பு கடித்த காயம் முதல்
காமத்தின் நுழைவு வரை

அழுகை மூட்டும் சோகமெனினும்
கண்ணீர் துளிக்கும் மகிழ்ச்சியெனினும்
தோள் சாயும் தலையை
உண் உணர்வுகளின்
சாயம் பூசியபடி வருடுவேன்

நட்புகாலத்தில்
கோபத்தால் பிரிவெனில்
தயக்கமின்றி மன்னிப்புகள் கேட்பேன்
இயல்பாய் இருத்தலுக்காக

அந்தரங்கள்
ஒரு வாசல் மாயக்குகைகள்
அனுமதி தந்தால் கூட
தலையிடுதல் வேண்டாம் -அங்கே
உரியவர் நுழையவே அனுமதி

ஆடை விலகி
அங்கங்கங்கள் வெளிப்பட்டால்
தயக்கங்கள் ஏதுமின்றி
சுட்டி காட்டியபடி தொடருவேன்
எல்லைகளற்ற நம் உரையாடலை

கனவு தோழி
__அவரவர் காதலை
தயக்கங்கள் ஏதுமின்றி பகிர்தல்
__நம் நட்பில்தானே சாத்தியமாகும் ...


10 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

Tech Shankar said...

கவிதை செம்ம க்ளாசிக்.

இதுக்கெல்லாம் பின்னூட்டம் வராதது - கவலையளிக்கிறது.

அதனால் இட்டுவிட்டேன் பின்னூட்டத்தை

ஜீவா said...

Thanks Tamil :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட்டகாசமான கவிதை
ஆர்ப்பாட்டமே இல்லாமல் இங்கே இருக்கிறது.

ஒத்தை வரி, இரட்டை வசனம் எல்லாம் ஒய்யாரமிடுகிறது.

அருமை நண்பரே.

என்னை போலவே கனவுகளோடு
ஆதாயம் தேடாத
நட்பாய் சிநேகிதி தேவை

வா சிநேகிதி
உன் வயதையொத்த
காமம் தேடாத தோழனாய்
என் முகவரியை அடையாமிடு

என்ன சொல்வதென்று தெரியவில்லை தோழரே,
அருமை ஆரம்பம் முதல் முடிவு வரை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அந்தரங்கள்
ஒரு வாசல் மாயக்குகைகள்
அனுமதி தந்தால் கூட
தலையிடுதல் வேண்டாம் -அங்கே
உரியவர் நுழையவே அனுமதி

ஆடை விலகி
அங்கங்கங்கள் வெளிப்பட்டால்
தயக்கங்கள் ஏதுமின்றி
சுட்டி காட்டியபடி தொடருவேன்
எல்லைகளற்ற நம் உரையாடலை//

எப்படிப்பா எழுத்துல சாத்தியப்பட்டது.

ஜீவா said...

நீஜமா சந்தோசமா இருக்குது .இத்தனை நாட்களாக என் diary இல் மட்டும் இருந்த கவிதைகளுக்கு பாராட்டுகள் வந்தது. கனவுத்தோழி கவிதை எழுதியது 7 வருடங்களுக்கு முன்னால் :) . இப்ப தான் தைரியமாக வெளியிட்டது :))

ஜீவா said...

இப்பொழுதுதான் பிளாக்கர் புதிது என்பதால் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றிகள் திரும்ப எப்படி சொல்வதுன்னு தெரியாம இருந்தேன் . தமிழ்நெஞ்சம்,அமிர்தவர்ஷினி அம்மா ,ஆதிரை க்கு நன்றிகள்

நட்புடன் ஜமால் said...

\வா சிநேகிதி
உன் வயதையொத்த
காமம் தேடாத தோழனாய்
என் முகவரியை அடையாமிடு\\

மிக மிக அருமை என்ற வார்த்தைகள் மட்டும் போறாது ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

மீண்டும் மீண்டும் படிக்கிறேன்

நெஞ்சம் நிறைகிறது..,

Anonymous said...

kedaikkuma nelaikuma ena ariyen ovoru ullathin thedal intha unmai
idhu kavithai alla unmai yethirparpu unmaiyana ullamgalin yethirparpu illaa thedal ethanai azhagai sonnai aadai vizhalagi irunthalum sutti katti kangalil neer thadhumbiyadhu...ippodhu purigiradhu eniya ennamgalum ullamgalum erukaththaan seigiradhu........really beautifullllllllllllllll pa

ஜீவா said...

thanks Tamilarasi