சர்க்கஸ் சிங்கங்கள்

சுற்றி நின்று
ஆர்பரித்த கூட்டத்தின் இரைச்சல்
விசிலடித்து சப்தமிட்ட மனிதர்கள்
தூரத்தில் அழுத குழந்தை
எதுவும் சலனப்படுத்தவில்லை
சிங்கத்தின் பிடரி காதுகளுக்குள்
சுள்ளென்று முதுகில்
விழுந்த சாட்டையடி பொழுதுகளில்
பழகிய வித்தையை விளையாட்டுன காட்டி
மீண்டும் கூண்டுக்குள் அடங்கியது
மனிதர்கள் மீதான வன்மத்தோடு...

2 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

மீண்டும் கூண்டுக்குள் அடங்கியது
மனிதர்கள் மீதான வன்மத்தோடு...]]

பாவம் தான் ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

மீண்டும் கூண்டுக்குள் அடங்கியது
மனிதர்கள் மீதான வன்மத்தோடு...]]

சிங்கத்துக்(கே) இந்த கதிதான் இப்ப......

வருத்தமான ஆனால் உண்மை உரைக்கும் கவிதை.