முயலுக்கும் கொம்புகள்

எழு எனதருமை தோழா
எவரும் தோற்றவரில்லை

விழுந்த விந்தில் உயிர்த்து
தாயின் கருப்பை தாண்டி
ஜனனம் கண்டவரெல்லாம்
இயற்கையுடன் இயைந்து
மரணம் வென்ற வீரனே

பூமி துளைத்து
புதிதாய் பிறந்த புல்லுக்கும்
பனித்துளி மகுடம் எனில்
உனக்கு மட்டும் இல்லாமலிருக்குமா
எங்கு எப்போது கண்டுபிடி

துவளாமல் கரை தொடும்
அலையிடம் கற்றுக்கொள்
முயற்சியுக்கும்,தோல்வியுக்கும்
எண்ணிக்கை கணக்கு இல்லையென

மண்புழுவின் அம்சம் நீ
வெட்ட வெட்ட
துண்டுகளின் உருவமாய் பிறப்பவன்

விதையின் விருட்சம் நீ
மண்ணில் புதைத்தல் கூட
உனது பிறப்பின் துவக்கமாகும்

அருவியின் அடையாளம் நீ
புகையாய் ஆதாரமின்றி விழுதலும்
பாறையை துளாக்கும் எழுச்சியாகும்

அண்டவெளி தாண்டி
உலகு கண்ட மானுடத்தின்
ஓருதுளி அடையாளம் நீ
பிறகு எப்படி தோற்பாய்

திட்டமிட்டு முயற்சி செய்திரு
எத்தனை முறை தோற்றாலும்
நம்பிக்கையோடு முயற்சி செய்திரு
முயலுக்கும் கூட
கொம்புகள் முளைக்க வைத்திடலாம்...

4 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

தாரணி பிரியா said...

எத்தனை தன்னம்பிக்கை கூடிய வரிகள் ஜீவா. ஒவ்வொரு வரியும் அருமை. எனக்கு வரி வரியாக பிரித்து பாராட்ட தெரியவில்லை நண்பரே. அற்புதமாக இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று புலம்புவர்களுக்கு தன்னம்பிக்கை தந்து இருக்கிறீர்கள். நிச்சயம் முயலுக்கும் கொம்பு முளைக்கும் நண்பரே

ஜீவா said...

THANKS Tharani priya :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

விழுந்த விந்தில் உயிர்த்து
தாயின் கருப்பை தாண்டி
ஜனனம் கண்டவரெல்லாம்
இயற்கையுடன் இயைந்து
மரணம் வென்ற வீரனே

பூமி துளைத்து
புதிதாய் பிறந்த புல்லுக்கும்
பனித்துளி மகுடம் எனில்
உனக்கு மட்டும் இல்லாமலிருக்குமா
எங்கு எப்போது கண்டுபிடி

அண்டவெளி தாண்டி
உலகு கண்ட மானுடத்தின்
ஓருதுளி அடையாளம் நீ
பிறகு எப்படி தோற்பாய்

பூஸ்ட் குடிச்சா மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க இல்ல.

அதுமாதிரி இருக்குங்க இந்த கவிதை.
தன்னம்பிக்கை டானிக்.
காதல்ல தான் கலக்குவீங்கன்னு பார்த்தா எம்.எஸ். உதயமூர்த்தி ரேஞ்சுக்கு தன்னம்பிக்கை சொல்றீங்க.

நல்லாருக்குங்க.

ஜீவா said...

thanks to amithu amma