கவிதைகள் என போதை

கவிதையொன்று
எழுத வேண்டும் இப்பொழுதே

இலக்கண சுமைகளின்
வரைமுறை தடங்கள் ஏதுமின்றி
புதுக்கவிதைகளென புணர்ந்து
பொய்களாய் பெயரிட்டு
எப்படியாவது கவிதை வேண்டும்

உரையாடல் வடிவங்களை
சற்றே நெடித்து,ஒடித்து
முடிந்தால் உரையாடலை கூட
கவிதையென பதித்தல் வேண்டும்

இயல்பான விஷயங்களையும்
எதிர்மறை பார்வை கொண்டு
பொய்யாய்,சகதியாய்
ஞானியாய்,ஞானப்பார்வையாய்
நிகழ்வுகள்,கனவுகளென வார்த்தைகளிட்டு
இப்பொழுதே கவிதையொன்று தேவை

எனக்கு தேவையென்பது
கவிதையெனும் போதை அவ்வளவே

என் செய்வாய் தமிழே
புதுக்கவிதைகளென ஆபரணமிட்டோம்
இப்பொழுதோ உரையாடல் சுமைகளாய்...

5 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

மாதவராஜ் said...

நண்பரே!

உங்கள் அலுப்பும், வருத்தமும் நியாயமானது.
ஒரு நல்ல கவிதையை படைத்தால் அல்லது படித்தால் தீர்ந்து விடும்.

//உரையாடல்களின் சுமையாய் அழுத்துகிறது//
பாரதியின் வசன் கவிதைகளைக் கொஞ்ச நேரம் தினமும் படியுங்கள்.

நட்புடன் ஜமால் said...

\\கவிதையொன்று
எழுத வேண்டும் இப்பொழுதே\\

என்ன ஜீவன் என் புலம்பலை நீங்க எழுதியிருக்கீங்க.

நட்புடன் ஜமால் said...

\\கவிதையெனும் போதை\\


இரசிக்கும் அனைத்தும் போதையோ.

கவிதையெனும் போதையா - அதனால் வரும் விலைவுகள் தரும் போதையா

வேலன். said...

அருமையான கவிதை.

வாழ்க வளமுடன்,
வேலன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்பொழுதோ உரையாடல் சுமைகளாய்..\\

:)-