என் டைரியின் பக்கங்களில்

என் பிரியமான டைரியே
வெற்று தாள்களின் பக்கங்களில்
உயிர் சுமத்திடும் உணர்வு பூமியே

உன்னுள் உணர்வுகள்,நிகழ்வுகளை
முலாம் பூசியபடி பதிவுடுகிறேன்
விமர்சனங்கள் ஏதுமின்றி ஏற்கிறாய்
எப்பொழுதும் எனக்கானவளாய்

உன்னுள் எப்பொழுதாவது நிகழ்ந்திடும்
அரைகுறை பிரசவங்களையும் கூட
தயக்கங்கள் ஏதுமின்றி ஏற்கிறாய்
நிஜமான தாயன்போடு


உன்னுள் துக்கங்கள்,அழுகையை
யாருக்கும் தெரியாமல் புதைக்கிறேன்
சலனமின்றி விழுங்கி கொள்கிறாய்
கரிசல்காட்டு பூமியாய்

உன்னுள் கனவுகளை,காதலை
முரசடித்தபடி பதிவிடுகிறேன்
நான் சோர்ந்து உறங்குகையில்
முரசொலிகளை சத்தமாய் ஒலிப்பாய்

உன்னுள் எப்பொழுதுகளிலும்
இரவல் உணர்வுகளுடன் நுழைவதில்லை
நீயும் அனுமதித்ததில்லை -இதுவரை
எந்த சலுகையுடனும்

உன்னை
வயதுகளில் முதிர்ந்த பெண்ணின்
இரகசிய முத்தமாய் மறைத்திடுவேன்
அந்தரங்கத்தின் முகமல்லவா நீ

உன்
எல்லை கோடுகளிலயே வாழ்கிறேன்
நீ மட்டுமே தானே ஏற்பாய்
நான் நானாகவே வாழ்ந்திட

என்
டைரியெனும் நிகழ்கால சுமைதாங்கியே
சுமைகள் இறக்க முயலுகிறேன்
நீயோ
வழிப்போக்கனையும் ஏற்கிறாயடி
நன்றிகள் பல உனக்கு...


7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\என் பிரியமான டைரியே
வெற்று தாள்களின் பக்கங்களில்
உயிர் சுமத்திடும் உணர்வு பூமியே\\

வாவ் ...

அழகான விளக்கம் ...

நட்புடன் ஜமால் said...

\\உன்னை
வயதுகளில் முதிர்ந்த பெண்ணின்
இரகசிய முத்தமாய் மறைத்திடுவேன்
அந்தரங்கத்தின் முகமல்லவா நீ\\

மிக அருமை சகோ ...

நட்புடன் ஜமால் said...

\\உன்னுள் துக்கங்கள்,அழுகையை
யாருக்கும் தெரியாமல் புதைக்கிறேன்
சலனமின்றி விழுங்கி கொள்கிறாய்\\

மேலே 3 கீழே 1ல் அடக்கம் ...

\\கரிசல்காட்டு பூமியாய்\\

நட்புடன் ஜமால் said...

\\உன்
எல்லை கோடுகளிலயே வாழ்கிறேன்
நீ மட்டுமே தானே ஏற்பாய்
நான் நானாகவே வாழ்ந்திட\\

உண்மை ...

நட்புடன் ஜமால் said...

\\என்
டைரியெனும் நிகழ்கால சுமைதாங்கியே
சுமைகள் இறக்க முயலுகிறேன்
நீயோ
வழிப்போக்கனையும் ஏற்கிறாயடி
நன்றிகள் பல உனக்கு...\\

அருமை நண்பா ...

ஜீவா said...

ஜமாலுக்கு நன்றிகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

உன்
எல்லை கோடுகளிலயே வாழ்கிறேன்
நீ மட்டுமே தானே ஏற்பாய்
நான் நானாகவே வாழ்ந்திட


:)-
மிகவும் அருமை