காதலித்ததால் கவிதைகள்-2


உன்னால் மட்டுமே முடிகிறதடி
எனை முழுமையாய் தின்றும்
இன்னும் பசியோடிருப்பது ...

நெஞ்சுக்குள்
தீ வைத்தது நீயென்றாய்
நானோ நீதான் என்றேன்
எப்படியோ தீ பற்றிக்கொண்டதடி ...

ஏதேதோ
பேச வேண்டுமென திட்டமிட்டு
உன் பார்வைகளில்
சிக்கிகொண்டு தடுமாறியது நானும்
என் வார்த்தைகளும் தான்

பையத்திய செயல்கள் என
கேலி பேசிய எனையே
செய்ய வைத்தது காதல்..

பிடிக்காத விஷயங்களும்
பிடித்து போகிறது நிஜமாய்
உனை பார்க்க முடியுமெனில்...2 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

"ஏதேதோ
பேச வேண்டுமென திட்டமிட்டு
உன் பார்வைகளில்
சிக்கிகொண்டு தடுமாறியது நானும்
என் வார்த்தைகளும் தான்" வரிகளை இரசித்தேன்.

உங்கள் கவிதை வரிகள் பலவும் உள்ளத்துள் நிறைந்து நிற்கின்றன.

ச.முத்துவேல் said...

உள்ளபடியே பல கவிதைகள், ஆச்சரியமும், குதூகலமும் அளிக்கின்றன. குறிப்பாகக் காதல் கவிதைகள்.எளிமையான,வெளிப்படையான
நல்ல கவிதைகள்.வலைப்பக்கம் முழுமைக்குமாய் இதைச் சொல்கிறேன்.
இன்னொரு குறிப்பிட்டே ஆக வேண்டியஅம்சம்,வலைப்பக்கங்களின் வடிவமைப்பும்,மிகப் பொறுத்தமான படங்களும். பாராட்டுக்கள்.