செல்ல திருடன்

எப்படி இருக்கிறான்
உயிர் திருடன்!

எச்சிலோடும் சிரிப்பில்
அடம்பிடிக்கும் அழுகையில்
விழுந்தெழும் நடையில்
உயிர் திருடிய திருடன்!

என் தேவதையை
அன்னையென திருடிய திருடன்
இப்பொழுது என்னையும் திருடுகிறான்!

இவன்
இல்லாத நாட்களில்
வீடும் வெறுமையற்று
நானும் வெற்றிடமாய் தோற்கிறேன்!

கிறுக்கல் இல்லாத சுவர்கள்
உடைக்காத உன் பொம்மைகள்
சாதம் இறைக்காத மேஜை
குட்டிகுட்டியாய் ஆடைகள்
உலர்த்தாத கொடிக்கயிறு
முக்கியமாய்
நீ நனைக்காத படுக்கை

மௌனமாய் காத்திருக்கிறது
உன் அப்பாவை போலவே
ராஜகுமாரன்
திரும்பி வரும் நாளுக்காக...

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: