தையதக்கா

தையதக்க தையதக்கா
சந்சோச கூச்சலிட
தங்க மகன் பிறந்தான்!

பிள்ளைக்காக கலங்கிய காலங்கள்
மழைக்
கால மேகங்களாய் கரைய
தேவனாய் பிறந்து வந்தான் !

கண் பட்டுவிடுமோயென
உன் தாலட்டுகளை
மௌனமாய் இசைத்தோமடா !

இனி
பால் வாசம் வீசும் தலையணைகளும்
சிறுநீரால் நனைந்த
படுக்கை விரிப்புகளும்
முகமெங்கும் நனைத்திடும் முத்தங்களும்
சி்ன்னஞ்சிறு செய்கையில்
நெகிழ்ந்து நீளும் நிமிடங்களும்
எங்களுக்கும் சொந்தமாகும் செல்லமே!

எந்திர வாழ்க்கையின்
மனித படிமங்களுக்கு மத்தியில்
எங்களிருவரின்
ஒற்றை உலகம் நீயடா

உனக்காக உறங்காத இரவுகளில்
ஆனந்த கண்ணன் நீயுறங்க
எங்களின் வாழ்க்கை கதைகள் தாலாட்டாய்

உன் விரல் ரேகையில்
எங்களின் வாழ்க்கை பயணம்
உந்தன் புன்சிரிப்பில்
எங்களின் உயிர் சிரிப்பு

சின்னஞ்சிறு ஆசைகளை
தர மறுத்த இறைவன்
சந்தோச பொக்கிஷத்தை
உள்ளங்கையில் தந்துவிட்டு
என்ன பெயரென சிரித்தான்
நன்றியும் கர்வமுமாய் சொன்னோம்
தனஞ்ஜெய் எனும் ஜித்து என...

4 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

அன்பான வாழ்த்துகள்!

sakthi said...

வாழ்த்துக்கள் :))

தாரணி பிரியா said...

கோமதிக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜீவா :)
ஜித்து கூப்பிட நல்லா இருக்கு.குட்டி பையனை கேட்டதா சொல்லுங்க :)

ஜீவா said...

thanks to all