பத்திரிக்கை தர்மம்

அப்பத்திரிக்கையின்
முதல் பக்கத்தில் நடிகன்
நடுப்பக்கத்தில்
நடிகையின் தொப்புள் தரிசனம்
இடைஇடையே- கிரிக்கெட்டின்
சில வெற்றிகளும் , பல தோல்விகளும்
சமையல் குறிப்புகள்
நகைச்சுவை படத் தோரணங்கள்
வாங்கிவிட்டீர்களா
கூவி அழைக்கும் விளம்பரங்கள்
மிக முக்கியமாய்
அரசியல் கோமாளி அறிக்கைகள்
போனால் போகட்டும்மென
கடைசி பக்க ஓரங்களில்
" இலங்கை அகதி வாழ்க்கை" என
பக்கம் நிரப்பும் கட்டுரை ..****** வார இதழ்கள் அவ்வளவாய் படிப்பதில்லை.எதிர்பாராமல் சென்ற வார குங்குமம் பத்திரிக்கை பார்த்த பின்பு தோன்றியது. *****

7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

Anonymous said...

எஸ் ரா ஒரு முறை சொன்னது ஞாபகம் வருது ஜீவா.

வாரப்பத்திரிக்கை என்பது ஒரு டவுன் பஸ் போல எல்லாத் தரப்பினரும், பல்வேறு தேவைகளுடனும் பிரயாணம் செய்வது. குறிப்பிட்ட முகச்சாயமணிய முடியாதது.

என்றாலும் குறைந்த பட்ச நேர்மைகூடா இல்லாத பத்திரிக்கைகளைப் படிக்க நேர்ந்தால் கொதித்தழுகிறது மனது.

பிரியமுடன் பிரபு said...

வெறும் பிழைப்பு

ஹரிகரன் said...

இந்த குப்பைகளை பார்ப்பதற்கே எரிச்சலாக இருக்கிறது. வாரப்பத்திரிக்கை களுக்கு என்ன பத்திரிக்கை தர்மம் இனாமாக சோப்பு, ஷாம்பு, ஊறுகாய்.. இப்படி விற்பதற்கு கேவலமாக இல்லை...

இவற்றிற்கு மாற்றாக வருகின்ற இலக்கிய, அரசியல் மாத இதழ்களை மக்கள் பெருவாரியாக வாசிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாம்.

Geevaa said...

நிஜத்தை சொன்னிர்கள் பிரபு

Geevaa said...

வாருங்கள் ஹரிகரன்,

தங்களின் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள் பல

Geevaa said...

வடகரை வேலன்
தங்களின் வருகைக்கு நன்றிகள் பல

நட்புடன் ஜமால் said...

மக்களின் இரசனையும் இப்படித்தான் இருக்கோ[[போனால் போகட்டும்மென
கடைசி பக்க ஓரங்களில்
" இலங்கை அகதி வாழ்க்கை" என
பக்கம் நிரப்பும் கட்டுரை ..]]


வேதனையானது ...