உயிர்ப்பாய்

இறக்கை கட்டிப்பறக்கும்
நம் அலுவல் நேரத்தில்
வள்ளுவன்,வாசுகியாய்
நாமென்றும் இல்லை
கிளம்பும் நேரத்தில் சண்டைகளுடன் நானும்
திரும்பும் நேரத்தில் சோர்வாய் நீயும்
வார விடுமுறை நாட்களும்
துணிகள் துவைத்தும்
விட்டு போனவைகளை முடித்தும்
தொடங்கி விடுகிறது திங்கட்கிழமையாய்
இடையே எப்பொழுதாவது
அலைபேசியில் சத்தமிடும்
உன் "ஐ லவ் யு" குறுஞ்செய்திகள் தான்
இன்னும் உயிர்ப்பிக்கிறது
என்னையும் ! நம் காதலையும்...

10 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

தமிழ் அமுதன் said...

என்ன இதெல்லாம்? ;;)))

ஆ.சுதா said...

விட்டு விட்டு வந்தாலும்.
கவிதையில் இழுத்து விடுகின்றீர்கள் ஜீவா!

sakthi said...

a wonderful one

நட்புடன் ஜமால் said...

உன் "ஐ லவ் யு" குறுஞ்செய்திகள்
இன்னும் உயிர்ப்பிக்கிறது
என்னையும்!நம் காதலையும்\\



ஆரோக்கியம்

நல்ல விடயம்

அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்

Nathanjagk said...

குறுஞ்செய்தி என்றாலும் அருஞ்​செய்தி!Sweet Memories Services!

மயாதி said...

நல்லாருக்கு ...

காமராஜ் said...

இந்த அலுவலகப்பரபரப்பில்,
மனைவியோடு மல்லுக்கு நிற்கும்
சண்டைக்காலயில், சுரீர்க்கவிதை
ரொம்ப அருமை ஜீவா.

வால்பையன் said...

அலைபேசியிலேயே இப்போ குடும்பம் நடத்துறாங்களே!

ஜீவா said...

என்ன இதெல்லாம்? ;;)))
//சும்மா தான் ஜீவன்

கவிதையில் இழுத்து விடுகின்றீர்கள்
//
ரொம்ப நன்றி முத்து,

சக்திக்கு வரவேற்பும் ,நன்றியும்
ஜெகநாதன்க்கு வரவேற்பும் ,நன்றியும்
மயாதிக்கு வரவேற்பும் ,நன்றியும்

சண்டைக்காலயில், சுரீர்க்கவிதை
ரொம்ப அருமை ஜீவா.
நன்றி காமராஜ் , எப்படி இருக்கிங்க

அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்
//
நிச்சயமாக ஜமால், எப்படி இருக்கிங்க ,நன்றி

அலைபேசியிலேயே இப்போ குடும்பம் நடத்துறாங்களே!
//வால் பையன் நீங்க கேட்டது நியாயம் தான் :)

வேலன். said...

விட்டு விட்டு வந்தாலும்.
கவிதையில் இழுத்து விடுகின்றீர்கள்-

முத்துராமலிங்கம் கருத்தை ஆதரிக்கின்றேன்...

வாழ்க வளமுடன்,
வேலன்.