தங்க மீன்கள்

அழகான கண்ணாடி குடுவையில்
தங்கமீன்கள் இரண்டு
ஒருநாள் தவறிய குடுவை
விழுந்து உடைந்து சிதறியது
இறக்கையில் அழுத
தங்கமீங்களின் கண்ணிரும்
வடிந்த நீரோடு
கலந்தோடியது யாருமறியாமல் தோழி...


7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

மிக அருமை ஜீவா!

தண்ணீரிலே மீண் அழுதால் ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொஞ்சம் இன்னும் மெனக்கெட்டு இருந்தால் கவிதை இன்னும் அழகாக வந்திருக்கும் என்பது என் கருத்து.

தோழமையுடன்
அமித்து அம்மா.

தமிழ் அமுதன் said...

நல்ல கவிதை ! அமித்து அம்மாவை வழி மொழிகிறேன்!

ஜீவா said...

எப்பொழுதும் உங்களின் நட்பு தொடரவேண்டும்,நன்றி தோழமை ஜமாலுக்கு

ஜீவா said...

அமித்து அம்மா,ஜீவன்,


தெரியவில்லை,அவ்வளவுதான் என்னால் முடிந்தது.எனது தளத்தில் எழுதிய அத்தனை வார்த்தைகளும் (கவிதைகள் என்று சொல்ல முடியாது ) என்னை ஏதோ ஒரு நேரத்தில் பாதித்தவை மற்றும் என்னோடு தொடர்புள்ளவைகள் மட்டுமே.

இப்பொழுது என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள முயற்சிக்கையில் எனது வார்த்தைகள் பலம் இழந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

பார்ப்போம் மீண்டும் எனது வார்த்தைகள் என்னோடு வருகையில் மீண்டும் வருகிறேன் உங்களோடு

உங்களின் தோழமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

priyamudanprabu said...

நல்ல கவிதை
மிக அருமை ஜீவா!

வேலன். said...

கவிதை வரிகளை இன்னும் அதிகபடுத்தியிருக்கலாம்.

கவிதை அருமை.

வாழ்க வளமுடன்,
வேலன்.