பரமபத காதல்

இங்கே நம் காதல்
பரமபத விளையாட்டில்
பகடை காய்களாய் உருட்டபடுகிறது

முகம் தெரிந்த உறவுகளும்
முகம் தெரியாத மனிதர்களும்
போகிற போக்கில் தொடர்பின்றி
பகடைகளை உருட்டி கடக்கிறார்கள்

தாயங்கள் விழுந்தால்
பரமபத ஏணியின் தொடக்கம்
தவறிய எண்கள் விழுந்தால்
பரமபத பாம்பின் தொடக்கம்
இவர்களுக்கு நம்காதல் பரமபத விளையாட்டாய்


பகடைகள் உருளும் பொழுதுகளில்
நம் காதலும் கனவுகளும் தானே
கண்ணிரோடு உருளுவது
யாருக்காவது தெரியுமா தோழி

எனக்கான கனவாய்
மஞ்சள் பூசிய தேவதை
வெட்கங்களே அதிகமாய் பூசி
கூரைபுடவைதனில் சிறுமியாய்
மணமேடையில் என்னருகில் நீ

உனக்கான கனவாய்
கருப்பு நிறத்தவன்
ஆண்மையில் வெட்கங்கள் பூசி
பட்டுவேட்டி சிறுவனாய்
தாய்மடி தேடி உன்னருகில் நான்

நெஞ்சோடு முகம் புதைத்து
கண்ணிரால் கேட்டாய் -எப்போதடா
நமக்கும் நிச்சய திருமணம் என
என்ன பொய் சொல்லி
உன்னையும் ஆட்டத்தில் ஏமாற்றுவதடி

பரமபத பாம்பின்
வால் பிடித்த நேரங்களில்
நீயும் கூட பயப்படுகிறாய்
மரணித்துவிடுவோமா என அசடாய்
நாம் தோற்றால்
இங்கே காதல் அல்லவா தோற்கும் ?

பரமபத ஆட்டத்தின் முடிவில்
பகடை காய்கள் கண்டிப்பாய்
பெட்டிக்குள் பத்திரப்பட வேண்டுமடி
அங்கும் அழகாய் காதலிப்போம் தேவதையே ...13 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

வேலன். said...

கவிதை அருமை...

மரணித்துவேடுவோமா-மரணித்துவிடுவோமா .,
என வரும் என்று நினைக்கின்றேன்
வாழ்க வளமுடன்,
வேலன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகடைகள் உருளும் பொழுதுகளில்
நம் காதலும் கனவுகளும் தானே
கண்ணிரோடு உருளுவது
யாருக்காவது தெரியுமா தோழி

:)-

மாதவராஜ் said...

ஜீவா!

காதல் கவிதையில் பரமபதம் விளையாடி இருக்கிறீர்கள். ஏணிகளும் இருக்கின்றன. பாம்புகளும் இருக்கின்றன.

ஜீவா said...

thanks velan :)

ஜீவா said...

Hi Amithu amma

:(

ஜீவா said...

Thank you Madhavaraj,

ஆ.முத்துராமலிங்கம் said...

ஜீவா..

கவிதை அருமையா இருக்கு
(பாம்பு மாதிரி கொஞ்சம் நீலமோ)

அன்புமணி said...

//நீயும் கூட பயப்படுகிறாய்
மரணித்துவிடுவோமா என அசடாய்
நாம் தோற்றால்
இங்கே காதல் அல்லவா தோற்கும் ?//

தத்வார்த்தமான வரிகள். மிக நன்று!

ச.முத்துவேல் said...

/பரமபத ஆட்டத்தின் முடிவில்
பகடை காய்கள் கண்டிப்பாய்
பெட்டிக்குள் பத்திரப்பட வேண்டுமடி
அங்கும் அழகாய் காதலிப்போம் தேவதையே .../

நல்லாருக்கு...

ஜீவா said...

எங்கு கவிதை இருந்தாலும் அங்கு நான் இருப்பேன் ஜீவனுடன் இந்த அன்புடன் ஜீவா , நாம் இருவரும் ஒருபெயரில் கவிதை பிரியர்களாய். உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை
அன்புடன்
ஜீவா

ஜீவா said...

தோழமை முத்துராமலிங்கம்,அன்புமணி க்கு நன்றிகள்

ஜீவா said...

வாங்க ஜீவா , தங்களின் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள்

ஜீவா said...

ஜீவனுடன் இந்த அன்புடன் ஜீவா , நாம் இருவரும் ஒருபெயரில் கவிதை பிரியர்களாய் ///


சந்தோசமே