சிறுபறவையாய்

எனக்கான
சின்னஞ்சிறு உலகம் இது
சின்னஞ்சிறு வானம் இது
சிறுபறவையாய்
சிறகுகள் விரித்து பறக்கிறேன்

பார்ப்பவர்கள்
கல்லெறிந்து காயப்படுத்தலாம்
தானியங்கள் வீசி பரவசப்படலாம்
எனக்கொன்றும் கவலையில்லை

பறக்கையில் விழுந்த எச்சத்தில்
சில விதைகள் விருட்சமாய்
பூமியற்ற இடத்தில் விழுந்தவை
காய்ந்து வெறுப்பேற்றும் கறைகளாய்
எனக்கொன்றும் கவலையில்லை

சிறகுகள் விரியும்
பலம்வரை பறந்திருப்பேன்
அவ்வளவே எனக்கான வாழ்க்கை...



19 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

ஆதவா said...

என்னங்க... கவிதையில் பலமே இல்லையே... ஒரு குருவி குறித்த மிகச் சிறு குறிப்பு போல இருக்கிறது!!!! இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்...

நட்புடன் ஜமால் said...

\\கல்லெறிந்து காயப்படுத்தலாம்
தானியங்கள் வீசி பரவசப்படலாம்
\\

சரியா சொன்னீங்க ...

\\சிறகுகள் விரியும் பலம்வரை
பறந்திருப்பேன் அவ்வளவே....\\

அருமை.

ஜீவா said...

ஆதவா,இது குருவி பற்றியது அல்ல

சிறகுகள் விரியும் பலம்வரை
பறந்திருப்பேன் அவ்வளவே....

ஜீவா said...

வாங்க ஜமால் .இப்பொழுதெல்லாம் நீங்கள் எனது பதிவின் பக்கம் அதிகம் வருவதில்லை என்று வருத்தம் இருத்தம் இருந்தது .

நன்றி ஜமால் தங்களின் வருகைக்கும்
பின்னுட்டத்திற்கும் நன்றி

மாதவராஜ் said...

ஜீவா!

சிறுதுளி காற்றை சுவாசித்து பெருங்காற்றையே எதிர்த்துப் பறக்கும் வல்லமை குருவிக்கு உண்டு. அதை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்தான். ஆனாலும் அருமையான பார்வை.

தமிழ் அமுதன் said...

எனக்கு எது நேர்ந்தாலும்,அல்லது என்னால் எது நேர்ந்தாலும்
கவலையின்றி சிறகடிப்பேன்! எல்லோருக்கும் இந்த மனது
கிடைக்கட்டும்!

வேலன். said...

சிறு குருவிக்கு பெரிய மனம்...

மரம் வர காரணமாகிறது....

பெரிய மனது மனிதனுக்கு...

மரத்துடன் சேர்த்து குருவியையும்
அழிக்க மனம் விரும்புகிறது.

கவிதையும் - படமும் அழகு.

வாழ்க வளமுடன்,
வேலன்.

RAMYA said...

\\கல்லெறிந்து காயப்படுத்தலாம்
தானியங்கள் வீசி பரவசப்படலாம்
\\


ஆமாங்க அப்படிதான் செய்வாங்க
பார்க்க பாவமா இருக்கும்.

மனசுக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கும்

RAMYA said...

//
ஜீவா said...
ஆதவா,இது குருவி பற்றியது அல்ல

சிறகுகள் விரியும் பலம்வரை
பறந்திருப்பேன் அவ்வளவே....

//

ஆமாம் ஆதவா ஜீவா கூறி இருப்பது மிகவும் சரியே!!

ஜீவா said...

ஜீவன்
மிகச்சரியாக நான் சொல்லவந்ததை நீங்கள் புரிந்துகொண்டீர்கள்

ஜீவா said...

வேலன் உங்களின் வார்த்தைகள் எப்பொழுதும் புத்துணர்ச்சி தருவதாய்

ஜீவா said...

ரம்யா போன்ற பிரபல வலைப்பதிவர்களும் எனது உலகத்தில்

மிக சந்தோசமே :)

ஜீவா said...

தோழமை மாதவராஜ்

இப்பொழுது மாற்றிவிட்டேன் , என் மனதிற்கு சற்று திருப்தியாய்

உங்களை போன்ற அறிவார்ந்த தோழமைகள் சற்று கர்வமே

தோழமையுடன்
ஜீவன்

ஜீவா said...

தோழமை மாதவராஜ்

இப்பொழுது மாற்றிவிட்டேன் , என் மனதிற்கு சற்று திருப்தியாய்

உங்களை போன்ற அறிவார்ந்த தோழமைகளின் நட்பு சற்று கர்வமே எனக்கு

தோழமையுடன்
ஜீவன்

மாதேவி said...

"கவலையின்றி சிறகடிப்பேன்! சிறகுகள் விரியும் பலம்வரை பறந்திருப்பேன்...
அனைவர் மனங்களிலும் இருக்க வேண்டியதே.

குடந்தை அன்புமணி said...

எது நேர்ந்தபோதிலும் எனக்கான வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருப்பேன் என்ற தங்கள் கவிதை ஏற்க கூடியதே! வாழ்த்துகள்!

மண்குதிரை said...

hi jeeva !
excellent

Unknown said...

கவிதை எழுதிய மென்மனசு புரிகிறது. குருவி, அணில், காக்கை, பூனை, நாய், ஆடு, மாடு, கோழி, இவர்கள் எல்லாம் நம்மைச் சுற்றி இருப்பதால்தான் உலகம் அழகாக இருக்கிறது.

ஹேமா said...

//பறக்கையில் விழுந்த எச்சத்தில்
சில விதைகள் விருட்சமாய்
பூமியற்ற இடத்தில் விழுந்தவை
காய்ந்து வெறுப்பேற்றும் கறைகளாய்
எனக்கொன்றும் கவலையில்லை//

ஜீவா,கவிதையின் கரு அருமை.
எனக்குண்டான வாழ்க்கைக்குள் என்னால் முடிந்ததை செய்துவிட்டுப் போகிறேன் என்பதாய்.அழகு.