ஞாபகக் கூட்டுக்குள்

ஏதோ ஒரு ஞாபகம்
கடலலையென நெஞ்சில் அடித்து
புன்னகையை நுரை எச்சமாய்
உதட்டோரம் விட்டு சென்றது

அது எதுவென
நினைவு தட்டுகளை கலைத்து
இதுவரை தேடியும் வரவில்லை
ஞாபகக் கூட்டுக்குள்

தனிமையில் பயத்துடனும்
நெஞ்சில் ஏக்கத்துடனும்
வாழ்கை சிதறல்களை ஆராய்ந்தும் தோல்வியே

எங்கெங்கோ தேடித்தேடி
மனம் சோர்ந்ததே மிச்சம்
எது எப்படியோ
நிச்சயமாய் ஞாபகம் மிச்சமுள்ளது

பட்டாம்பூச்சி வண்ணத்தில்
பூவின் மறைவு பிரதேசத்தில்
குழந்தையின் கன்னக்குழி சிரிப்பில்
இயற்கையின் கணக்கற்ற இரகசியத்தில்
தேடித்தேடி உறங்குகையில்
கனவில் விடையாய் வந்தது
குழப்பமான புதிர் வயதில்
உனை பார்த்தபடியே இருக்க
மின்னலென தலை
த்தூக்கி
கள்ள சிரிப்பொன்றை
கண்பார்த்து சிரித்து மறைந்ததானடி....

10 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

ஆ.முத்துராமலிங்கம் said...

//ஏதோ ஒரு ஞாபகம்
கடலலையென நெஞ்சில் அடித்து
புன்னகையை நுரை எச்சமாய்
உதட்டோரம் விட்டு சென்றது//

ஆரம்பமே அழககாக உள்ளது

மாதவராஜ் said...

கவிதை நல்ல நயத்துடன் இருக்கு.உங்களின் பல கவிதைகள் இது போன்ற தளத்தில் இருப்பதாகப் படுகிறதே....

ஜீவா said...

Hi mathavaraj ,

உங்களின் பல கவிதைகள் இது போன்ற தளத்தில் இருப்பதாகப் படுகிறதே....///

புரிந்து கொள்ள முடியவில்லை .
கவிதைகளின் நடை ஒரே மாதிரி உள்ளதா ??

TKB காந்தி said...

//ஏதோ ஒரு ஞாபகம்
கடலையென நெஞ்சில் அடித்து//

இது 'கடலலையென' தானே ஜீவா?
கவிதை நல்லாயிருக்கு.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ஜீவா said...

//ஏதோ ஒரு ஞாபகம்
கடலையென நெஞ்சில் அடித்து..

தவறை சுட்டிகாட்டிய தோழமை காந்திக்கு நன்றி :)

ஜீவா said...

பின்னுட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் :)

தோழமையுடன்
ஜீவா

ராஜ்குமார் குவைத் said...

மிக்க நன்றி தோழரே...

முதல் அங்கிகாரமாய் (எய்ட்ஸ் -சில நியாயங்களும் சில அநியாயங்களும் )இந்த கட்டுரை விகடன் வலைத்தளத்தில் வந்தது மிக்க மகிழ்ச்சி.உங்களின் மூலமாகவே இந்த தகவலை நான் அறிந்தேன் .

உங்களை போன்ற ஓரிருவரின் பின்னுட்டங்கள்..என்னுடைய நாளைய பதிவுகளை செம்மையாக்கும்.
கருத்துக்களுக்கு நன்றி..


வாழ்கையின் மென்மையை,வாழ்கையின் யதார்த்தத்தை சொல்லுவதற்கு ஒரு மென்மையான மனது வேண்டும்.உங்களுடைய கவிதைகளில் உங்களுடைய மனம் தெரிகிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தனிமையில் பயத்துடனும்
நெஞ்சில் ஏக்கத்துடனும்
வாழ்கை சிதறல்களை ஆராய்ந்தும் தோல்வியே

எங்கெங்கோ தேடித்தேடி
மனம் சோர்ந்ததே மிச்சம்
எது எப்படியோ
நிச்சயமாய் ஞாபகம் மிச்சமுள்ளது

:)-
நல்லா இருக்கு

எம்.ரிஷான் ஷெரீப் said...

அழகான கவிதை..!