கேள்விகள் மட்டுமே அனுமதி

முன் நின்ற கடவுள்
வரங்கள் ஏதுமில்லை
கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி
கட்டளையிட்டே பேச தொடங்கினான்

உலர்ந்த உதடுகளை
நடுங்கிய நாக்கால் பிடித்தபடி
கேள்விகளை தொடங்கினேன்

வழிமுறைகள் சொல்லிவிட்டு போ
துன்பமில்லா வாழ்க்கை
நிஜங்களிலும் கதாநாயகனாய்
படுத்தவுடன் உறக்கம்
எதிரியாய் இல்லா நண்பண்
கண்ணீர் இல்லா கண்கள்
எனை போற்றும் புகழ்
மாதக்கடைசியும் முதல் தேதிபோல
சண்டையில்லா தாம்பத்யம்
மேலதிகாரியும் என்முன் சேவகனாய்
பல்லாக்கில் தான் பயணங்கள்
முக்கியமாய் உனை போல
கேள்விகள் கேட்காமல்
வரங்கள் தரும் இறைவன்

பதில்கள் எதிர்பார்த்து நின்றவனிடமே
கேள்விகள் தொடங்கினான் கடவுள்

வெட்கமின்றி சத்தமிட்டு
நடனமாடி குழந்தைக்கு சிரிப்பு ?
உன்வீட்டு தோட்டத்தில்
பூத்த பூக்களிடம் நலம் விசாரிப்பு ?
மொட்டை மாடி இரவுகளில்
நட்சத்திரங்களுடன் கதைகள் பேசியது ?
மழைக்கால நிமிடங்களில்
சாரலோடு மெல்லிய பாடல் ?
கடற்கரை அலைகளோடு
ஓடிப்பிடித்த விளையாட்டு ?
குடும்பத்தின் உறவுகளோடு
சத்தமிட்டபடி நிலாச்சோறு ?

இல்லையென்று
ஒரு பதில் சொன்னாலும்
இன்னும் நீ
வாழ்க்கையை வாழவில்லை
வாழ்ந்துவிட்டு வா என்றபடி
சட்டென்று மறைந்தான் மீண்டும் இருளில்...

4 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\இன்னும் நீ
வாழ்க்கையை வாழவில்லை\\

மிகச்சரி

மாதவராஜ் said...

அருமையாக வந்திருக்கிறது...
வாழ்த்துக்கள்.
நான் படித்த ஒரு சிறு கவிதை...

”என்ன வரம் வேண்டும்?”
என்றார் கடவுள்.
”அது தெரியாத நீர் என்ன கடவுள்”

கோபிநாத் said...

அட்டகாசம் ;))

காமராஜ் said...

வாழ்வின் உன்னதங்கள் சின்னச்சின்ன
சந்தோசங்களில் இருக்கிறது இதை
ஜீவா சொன்னாலே போதும்.
பாவம் அந்தாளக்கூப்பிட்டு சிரமப்படுத்துவானேன்.
அவருக்கு இருக்கு ஆயிரம் கரசேவை, சிவசேனை,
ராம்சேனா. வெட்டுக்குத்து, மதக்கலவரம்.