அறை முழுக்க கேள்விகள்

எனக்கான
அறை முழுக்க கேள்விகள்
விடைகள் தேடி தேடி
இன்னும் உயிரோடுயிருக்கும் கேள்விகள்

கால்சட்டை சிறுவன்
பட்டாம்பூச்சி பிடித்த பொழுதுகளில்
காமத்தில் தொலைந்ததற்கு
யாரடி தோழி பொறுப்பு ?

சின்னஞ்சிறு மழலை தங்கை
விரல் பிடித்து நடந்த பொழுதுகளில்
உருவம் சிதைந்து
மரணித்த நேரத்தில் வலித்திருக்குமோ?
காரணமானவன் விடை தேடுகிறேன்

எனக்கான தேவதை
கனவுகளோடும்,காதலோடும்
இன்னும் காத்து இருக்கிறாளே
உறவுகளெற்ற நாளைய நாட்களில்
எங்களுக்கான வாழ்க்கை எவ்விதமாய் ?

ஊரெங்கும்
காற்றும் கூட உறங்குகையில்
உறக்கமற்ற இரவுகள்
சாபமாய், வரமாய்
விதித்திட்ட மனிதன் யாரோ ?

கேள்விகள் சேகரித்தபடி
காத்திருக்கிறேன் இன்னும் கேள்விகளுக்காக ....

11 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

Tech Shankar said...

உங்கள் பதிவும், கவிதையும் அருமை - உங்கள் blog template சூப்பர்

ஜீவா said...

thanks Tamil :)

மாதவராஜ் said...

ஜீவா!

ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு விதமாய். ஒரு கேள்வி நினவுத் தடத்தில், இன்னொரு கேள்வி கவலையின் ரேகைகளோடு, மற்றொன்று கனவுகள் கண்டு. இன்னும் வார்த்தைகளை வீரியமிக்கதாய் கண்டிருக்கலாமோ?

நட்புடன் ஜமால் said...

\\கால்சட்டை சிறுவன்
பட்டாம்பூச்சி பிடித்த பொழுதுகளில்
காமத்தில் தொலைந்ததற்கு
யாரடி தோழி பொறுப்பு ?\\

மிகவும் இரசித்த வரிகள்

ஆதவா said...

கேள்விகள் எத்தனையோ எழுந்து, எத்தனையோ அடங்கலாம்.. ஆனால் பதில்களைத் தேடுவதுதான் மனிதனின் வளர்ச்சியே இருக்கிறது...

நீளும் உங்கள் கேள்விகளுக்கு வாழ்த்துகள்

ஆதவா said...

மேலும் கேள்விக்கான பதிலும் உங்களுக்க்குள்லேயே இருக்க்க்கிறது.. அதனைத் தேடிப்பிடிப்பதுதான் உங்களது திறமையே!

தொடருங்கள்..

ஹேமா said...

வலிகளோடு நிறைந்த கவிவரிகள் கண்டேன்.வாழ்த்துக்கள் ஜீவா.

தொடர்ந்தும் எழுதுங்கள்.
மனப்பாரமும்கூடக் குறையும்.

ஹேமா said...

ஜீவா,எங்கள் வாழ்வைப் பொறுத்தமட்டில் கேள்விகள் மட்டுமே நிறைந்த அவஸ்தைகள்.கிடைக்காத பதில்கள் அரசியல்வாதிகளிடம்.

butterfly Surya said...

உங்கள் கேள்விகளுக்கு வாழ்த்துகள்

Just visit my blog about international movies and comment plz.

Cheers

அமிர்தவர்ஷினி அம்மா said...

சாபமாய், வரமாய்
விதித்திட்ட மனிதன் யாரோ ?கேள்விகள் சேகரித்தபடி
காத்திருக்கிறேன் இன்னும் கேள்விகளுக்காக

:)-
NICE

ராஜ்குமார் said...

உலகத்து இன்பங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.ஆனால் தமிழோடு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் அந்த இன்பம் எல்லையற்று நீளும்.

உங்கள் பனி சிறக்க வாழ்த்தும்

தோழமையுடன்
ராஜ்குமார்