சுவர்களற்ற ஈழத்து வீட்டில்

இன்னும்
சில நிமிடங்கள் பொறுத்திருங்கள்
சுவர்களற்ற ஈழத்து வீட்டில்
எனது ஒருவயது மகன்
தாயின்றி பசித்த வையீறுடன்
காய்ந்த கண்ணீர் கறைகளுடன்
நெஞ்சோடு இறுக்கியபடி உறங்குகிறான் ..

வந்தவர்களுக்கு உரிமையா
என்று
அவனும்
உரிமை உயிரென்று
நீங்களும் துப்பாக்கி ஏந்தட்டும்
யுத்த களத்தின் பரப்புகள்
எல்லைகளற்று , திசைகளற்று விரியட்டும்
இறுதியில்
நீண்ட யுத்தங்கள் முடியட்டும்
மனிதர்கள் யாருமின்றி
குண்டுகள் துளைத்த வெற்றி கொடிகளுடன்

மரணம் விட காயங்களுடன்
தாய் தேசம் பயணிக்கிறோம்
நேற்று வரை இருந்த
எனது தேசம்
எனது வீடு
எனது மனைவி
எனது மகன்,மகள்
எனது வாழ்க்கை யாதுமேன்றி
அகதி அடையாள அட்டையுடன்

அரசியல் நாய்கள்
வட்ட மேஜை மாநாடு
முடித்து முடிவெடுக்கும் வரை
உயிரோடு இருப்பாரா
பசியால் கதறும்
எம் தேசத்து குழைந்தைகள்

உறக்கமற்ற கண்களிலும்
அழகிய கனவு ஒன்றுண்டு
பள்ளி சென்ற
சின்ன சின்னஞ்சிறு குழந்தைகள்
எண்ணிக்கை குறையாமல்
வீடு வந்து சேருவார்
பின்னொரு நாளில்
கதைகள் பேசியபடி உறங்கிடுவோம்
பீரங்கி,துப்பாக்கி சத்தமற்ற
இரவுகளில் பசியின்றி நிம்மதியாய்

இன்னும்
சில நிமிடம் பொருத்திருங்கள்
அழுதபடி உறங்கிடும் மகன்
ஆழ்ந்த நித்திரை கொண்டதும்
பீரங்கி குண்டுகளை வீசலாம்
வலியின்றி
என் மகனாவது சாம்பலாகட்டும்
இறந்தும்
சிதைந்து போன தாயை தேடி
மரணத்தின் மயானத்தில் என்னோடு ....

17 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

வெத்து வேட்டு said...

வந்தவர்களுக்கு உரிமையா
என்று அவனும்
உரிமை உயிரென்று
நீங்களும் துப்பாக்கி ஏந்துங்கள்

:(.....

this is the fate of being a genuine tamil

Anonymous said...

ingu kaayathin valiai vida kanneer thaan valikiradhu?

Anonymous said...

ingu kaayathin valiai vida kanneerin valiye adhigam

Anonymous said...

//இன்னும்
சில நிமிடம் பொருத்திருங்கள்
அழுதபடி உறங்கிடும் மகன்
ஆழ்ந்த நித்திரை கொண்டதும்
பீரங்கி குண்டுகளை வீசலாம்
வலியின்றி
என் மகனாவது சாம்பலாகட்டும்
இறந்தும்
சிதைந்து போன தாயை தேடி
மரணத்தின் மயானத்தில் என்னோடு ....//
யதார்த்தமான கவிதை வரிகள்

Anonymous said...

எங்கள் வாழ்வியலினை படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்...... நித்ர்சனமான பதிவு..

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன சொல்றது

நெஞ்சை சுடும் நிஜத்தை கவிதையாய் வார்த்ததற்கு

Anonymous said...

முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!

ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...

முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!

அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?

முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...

நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!

பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!

வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.

நட்புடன் ஜமால் said...

:(

tamil24.blogspot.com said...

சுவர்களற்ற எங்கள் வீடுகள் கூரைகளற்ற வானுக்குக் கீழ் குடியிருக்கின்றன எம் மக்களுடன் சிதிலங்களாக.
இழப்பின் வலி எங்கள் சுவர்களுக்கும் தான்.

சாந்தி

ஆதவா said...

வலியின்றி இறந்தாலும் வலிக்கும் தானே மனம்???

மரணம் என்பது எந்த காரணங்களோடும் வரலாம்... காரணமே இல்லாமல் வரும்பொழுது???

குண்டுகளுக்குத் தெரிவதில்லை, யார் நல்லவரென்று... தெரிந்தால், பிரச்சனையே இல்லாமல் போயிருக்கும்.

கவிதையின் கதறலில் வலி தெரிகிறது.

மாதவராஜ் said...

ஜீவா!

தாங்க முடியவில்லை. தொண்டை அடைத்துப் போனது. Life is beautifil படத்தில் தூங்கும் தன் சின்னஞ்சிறு மகனை தோளில் சாய்த்து பனி பொழியும் நாஜிக்களின் முகாமில், அவனிடம் பேசிக்கொண்டே செல்லும் கைடோவை ஞாபகப்படுத்தியது. வலிக்கிறது.

Deepa J said...

மனம் கனக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் முடிவு எப்போது?

ஹேமா said...

ஜீவா,எங்கள் வாழ்வின் யதார்த்தம் கவிதையாய்!

Anonymous said...

http://youthful.vikatan.com/youth/bcorner.asp
யூட்த்ப்புல் விகடன்ல உங்க பதிவு வந்திருக்க்கு பாத்திட்டியளா??????????
வாழ்த்துக்கள்

ஜீவா said...

இங்கு பின்னுட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல

ஜீவா said...

http://youthful.vikatan.com/youth/bcorner.asp
யூட்த்ப்புல் விகடன்ல உங்க பதிவு///

நன்றி கவின் , நீங்கள் சொன்ன பிறகுதான் பார்த்தேன் , மிக்க நன்றி

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்