பட்டாம்பூச்சி விருது


இப்ப தான் பிளாக்ல சேர்ந்த மாதிரி (2 மாதம்) இருக்குது, நண்பர்கள் நிறைய பேர் கிடைத்ததுல ரொம்ப சந்தோசம், 2 பட்டாம் பூச்சி அவார்டு வாங்கியாச்சு,இதுக்கு முதல்ல நன்றி சொல்றது என்னோட இரட்டை சகோதரன் ஹரிக்கு,அவன்தான் தன்னோட laptop ய தந்தது தனக்கு இல்லாதப்ப கூட,


1,தமிழ் நெஞ்சம் - இவரோட பிளாக்கு ரொம்ப technical ,நான் நிறைய விஷயங்களை கத்துகிட்டது இந்த பிளாக்குல இருந்துதான்,ரொம்ப கவனத்தோட, படங்களோடு நல்லா இருக்கும் ,thanks tamil

2.தீராத பக்கங்கள் : திரு,மாதவராஜ் ரொம்ப அழகான,அழமான கட்டுரைக்களுக்கு சொந்தகாரர், முதன் முதலா பின்னுட்டமிட்டவரும் இவர் தான், ஆனா இன்னும் என் கூட " follow up " சேரவில்லை,வருத்தம் தான் ,ஆனா நான் சேர்ந்துகிட்டேன் :)

3.நட்புடன் ஜமால் : இன்னும் கூட ஆச்சரியமுண்டு ,எப்படி இவரால மட்டும் எல்லா வலைபக்கத்திலும் பின்னுட்ட முடிகிறது என்று, எனது எல்லா வரிகளுக்கும் பதிவிடும் தோழர்

7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றி Gg,

மீண்டும் ஒன்றா

மூன்றோடு சேர்த்து நான்காக ...

மீண்டும் நன்று தங்கள் இரட்டை சகோதரனுக்கும் ...

இப்படி ஒரு கவிஞரை வலைக்குல் உலாவ விட்டதற்கு ...

வேலன். said...

நன்றியுடன் நண்பர்களை நினைத்துப்பார்த்தது...நல்ல விஷயம்

வாழ்க வளமுடன்,
வேலன்.

தமிழ்நெஞ்சம் said...

அடடா.. மிஸ் ஆகிருச்சே. அப்போதைக்கு தெரியாமல் போச்சு. மன்னிக்கவும்.

முன்னாடியே கொடுத்திட்டீங்களா.. நான் இப்போதுதான் வந்ததாக நினைச்சுட்டேன்.. மன்னிகவும். தல

தமிழ்நெஞ்சம் said...

தவறாக நினைக்க வேண்டாம். வால்பையனுடன் நீங்களும் இணைந்து கொடுத்த விருதாக நினைத்து மகிழ்வடைகிறேன். நன்றிகள்//, வாழ்த்துக்களும் வரும் தகுதிகள் பார்த்திடுமோ ??

இப்போதுதான் இந்தச் சுட்டியைக் காண்கிறேன். நன்றிங்க..
ஒரே ஆளுக்கு இரண்டு முறை பட்டாம்பூச்சி விருதுகள் வழங்கப்பட வேண்டாம். ஆனால் இரண்டு பேர் இணைந்து வழங்குவதாக எண்ணிக்கொள்கிறேன்..

//நான் தான் உங்களுக்கு முதலில் பட்டாம்பூச்சி விருது அனுப்பியது .

தமிழ்நெஞ்சம் said...

மறுபடியும் மன்னிக்கவும்.

ஒரு க் விட்டுப்போச்சு - அதற்காக
மன்னிகவும்னு தப்பா எழுதிட்டேன்..

தமிழ்நெஞ்சம் said...

அடடடடா!.. Folowup ஐ நான் நிறுத்திட்டேனா. என்ன சொல்றீங்க.. எல்லாம் கூகிள் பண்ற சதியா.. அவங்கதான் இப்போ Follower அப்படிங்கற gadgetஐ Friend connect னு மாத்தி ஒரு குளறுபடி பண்ணிட்டாங்க..

இது பத்தி அதிரை ஜமால் ஒரு பதிவெழுதி இருந்தார்.

உங்கள் கருத்துரைக்கு நன்றி தல

//நீங்கள் என்னுடன் follow up நிருத்தி விட்டதால் நான் தான் தப்பாக எண்ணி விட்டேன் .

தமிழ்நெஞ்சம் said...

உங்கள் மனம் நோகச் செய்திருந்தால் மன்னிக்கவும். மேலும் உங்கள் கவிதைகள் அருமையாக உள்ளன. தொடரவும்.