யுகக்காதல்

நிமிடப் பொழுதுகளில்
நாமிருவரும்
சந்திக்காமலோ
காதலிக்காமலோ போயிருந்தால்
என்ன செய்திருப்பாய் என்றாய்
எப்படியடி நிகழும்
உனக்கும் எனக்குமான
இந்த நிமிடங்கள் கூட
எப்பொழுதோ தீர்மானிக்கப்பட்டது
நீயும் நானும்
வெறும் காரணங்களாய் காதலில்
எத்தனை யுகங்கள் கடந்தாலும்

1 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\உனக்கும் எனக்குமான
இந்த நிமிடங்கள் கூட
எப்பொழுதோ தீர்மானிக்கப்பட்டது\\

நிதர்சனம்.