அழகிய வேதாளமாய்

உன்னுடனான நினைவுகளுடன்
கனவுகளை சுமந்துகொண்டு
தொடர்கிறேன் இலக்கில்லா பயணத்தை

போகும் வழிதனில்
சில அறிந்த முகங்களும்
அறியப்படாத முகங்களுமாய்
தொடர்கிறது உறவுகளற்ற பயணம்

சற்றே அயர்ச்சியில்
இளைப்பறுதல் நிகழ்கையில்-உதட்டோரம்
காரணமற்ற புன்னகையாய்
நீயடி

முடிவுகளற்ற பயணம்
உருவமற்ற தடைகள்
ஏதுமற்ற வெளிகள்
என மிரட்சியாய் நிற்கையில்
கிச்சுகிச்சு செய்தபடி செல்லமாய்
விரட்டுகிறாய் பயணத்தை
முதுகில் சுமைகளற்ற சுமைகளாய்
அழகிய வேதாள பிசாசாய்
நீயடி...10 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

வேதாளமும் அழகாய் தெரிவது உங்கள் வரிகளில் தான்.

நட்புடன் ஜமால் said...

\\உன்னுடனான நினைவுகளுடன்
கனவுகளை சுமந்துகொண்டு
தொடர்கிறேன் இலக்கில்லா பயணத்தை
\\

அசத்தல் ஆரம்பம்.

\\ஏதுமற்ற வெளிகள்
என மிரட்சியாய் நிற்கையில்
கிச்சுகிச்சு செய்தபடி செல்லமாய்
விரட்டுகிறாய் பயணத்தை\\

இதுவும் தான்.

நட்புடன் ஜமால் said...

ஜீவன் வலைச்சரம் பாருங்க

வலைச்சரம்

இதையும் பாருங்க

அ.மு.செய்யது said...

//சற்றே அயர்ச்சியில்
இளைப்பறுதல் நிகழ்கையில்-உதட்டோரம்
காரணமற்ற புன்னகையாய் நீயடி
//

அருமை ஜீவா..அழகான வரிகள்...

அ.மு.செய்யது said...

வலைச்சரத்திலும் உங்கள் பெயர் மணக்கிறது..பாருங்களேன்.

ஜீவா said...

மிக்க நன்றி ஜமால்,உண்மையாகவே நீங்கள் தான் என் வரிகளுக்கு முதல் வாசகர் என்பதில் மகிழ்ச்சி,,
குறிப்பு:எப்படி ஜமால் ,கவிதைகளுக்கு photos attach செய்வதற்குள் ,உங்களால் பின்னுட்டமிட முடிகிறது :)

தோழமையுடன் ஜீவா

ஜீவா said...

அ.மு.செய்யது க்கும் நன்றிகள் தொடர்ந்து பதிவுகளை பார்ப்பதற்கும் ,பின்னுட்டமிடுவதற்கும்

தோழமையுடன் ஜீவா

thevanmayam said...

கிச்சுகிச்சு செய்தபடி செல்லமாய்
விரட்டுகிறாய் பயணத்தை
முதுகில் சுமைகளற்ற சுமைகளாய்
அழகிய வேதாள பிசாசாய் நீயடி///

ஜீவா நல்ல கவிதை!!!அருமை ஜீவா..அழகான வரிகள்.

பிரபு said...

//
முதுகில் சுமைகளற்ற சுமைகளாய்
அழகிய வேதாள பிசாசாய் நீயடி...
///

அழகிய வேதாளம் .......!!!

நல்லாயிருக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதுகில் சுமைகளற்ற சுமைகளாய்
அழகிய வேதாள பிசாசாய் நீயடி...

அழகான ராட்சசி
காதல் பிசாசு

மாதிரி சினிமாத்தனமா இல்லாம

இயல்பா ஒட்டு நிற்கிறது கடைசி வரிகள்

அழகு.