உன்னிடமிருந்து தொடங்கிடு

நடுத்தர வர்க்கத்தின் பிரதிபலிப்பே
எங்கிருந்து சாதி அழிப்பதென
குழம்பி யோசிக்கிறாயா

உன் நகரத்து வீட்டிற்கு
நலமறிய வரும் குடியானவன்
வாசற்படியோடே நின்றுதான்
நலமறிய வேண்டுமென விரும்புகிறாயே
அதையழித்து தொடங்கிடு

உன் வீட்டின்
பத்து வயது குழந்தைகூட
ஐம்பது வயது குடியானவனின்
பெயர் சொல்லி அழைக்கிறதே
அதையழித்து தொடங்கிடு

எவ்வித தயக்கமுமின்றி
செருப்பு கழட்டும் இடத்தில்
தனி பாத்திரம் கொடுத்து
உணவு பரிமாற முயலுகிறாயே
அதையழித்து தொடங்கிடு

சாதி எனும் காரணத்தோடு
பொருளாதாரத்தை மையமாக கொண்டு
சாதியை தொடரும் மானிடமே

தனி டீத்தண்ணி சிரட்டை
செருப்பின்றி நடத்தல்
மேலாடையின்றி இருத்தல் எனும்
வடிவங்களை மட்டுமே மாற்றி
சாதியை தொடருதலை விடு

சமத்துவ மானுடமே
உன்னிடமிருந்து தொடங்கிடு
மனிதனை மனிதனாக மட்டுமே
பார்த்திடும் கனவு தேசத்திற்காக

7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\"உன்னிடமிருந்து தொடங்கிடு"\\

ஆயிரம் அர்த்தம் சொல்லும் வார்த்தைகள் ...

நட்புடன் ஜமால் said...

\\உன் வீட்டின்
பத்து வயது குழந்தைகூட
ஐம்பது வயது குடியானவனின்
பெயர் சொல்லி அழைக்கிறதே
அதையழித்து தொடங்கிடு\\

சரியான விடயம்.

நட்புடன் ஜமால் said...

\\சமத்துவ மானுடமே
உன்னிடமிருந்து தொடங்கிடு
மனிதனை மனிதனாக மட்டுமே
பார்த்திடும் கனவு தேசத்திற்காக\\

மனிதனாக மாறிவிடு ...

மனிதம் காத்திடு ...

காமராஜ் said...

கவிதை வசீகரம் மிகுந்த அழகானது.
உண்மை எளிமையான அழகானது.
சரியான சவுக்கு வலிதெரியாத அடி.
வாழ்த்துக்கள் தமிழர் திருநாளில்.

காமராஜ் said...

கவிதை வசீகரம் மிகுந்த அழகானது.
உண்மை எளிமையான அழகானது.
சரியான சவுக்கு வலிதெரியாத அடி.
வாழ்த்துக்கள் தமிழர் திருநாளில்.

காமராஜ் said...

கவிதை வசீகரம் மிகுந்த அழகானது.
உண்மை எளிமையான அழகானது.
சரியான சவுக்கு வலிதெரியாத அடி.
வாழ்த்துக்கள் தமிழர் திருநாளில்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

\\உன் வீட்டின்
பத்து வயது குழந்தைகூட
ஐம்பது வயது குடியானவனின்
பெயர் சொல்லி அழைக்கிறதே
அதையழித்து தொடங்கிடு\\

சரியான தொடங்குதல் முயற்சி