நிஜம்

மனநலம் அற்றவர்
அருகில் நாடி வருகையில்
தங்கிவிடுவாரோ எனும் பயத்தில்
தொலைந்ததவைகளாய்
ரசித்த சேஷ்டைகளும்
குழந்தை முகமும்
தாண்டி சென்ற மனிதர்கள்
மீதான கோபமும்
பாவமென இரக்கப்பட்ட நானும்...


7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

அ.மு.செய்யது said...

புதுசா இருக்கு ஜீவா..

இருந்தாலும் கவிதையின் உட்கருத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை.

நட்புடன் ஜமால் said...

நிஜம் - அக்கறை.

தேவன் மாயம் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்


இலங்கைபற்றி ஒரு கவிதை எழுதியுள்ளேன்!!
முடிந்தால் அந்த உண்ர்வுபூர்வமான கவிதை படிக்கவும்

தமிழ்தினா said...

ஜீவா... நான் ஜமால் அண்ணாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.., உங்கள் வலைப்பூவினை அறிமுகம் செய்வித்தமைக்காக....

நிஜம் சுடத்தான் செய்கிறது....

ஜீவா said...

திரு.செய்யது ,
படத்தை பார்த்தவுடன் கவிதையின் கருத்து உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்

ஜமாலுக்கு நன்றிகள் கிடையாது ,என் தோழமைக்கு எதற்காக நன்றிகள் சொல்வது, இருந்தாலும் நன்றி ஜமால் :)

தேவன்மயம் அவர்களுக்கு உங்கள் கவிதை கண்ணீரை வரவழைத்து விட்டது,..
புதிய தோழர் தினகர்க்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்

வேலன். said...

மனநலம் அற்றவர்
அருகில் நாடி வருகையில்
தங்கிவிடுவாரோ எனும் பயத்தில்
தொலைந்ததவைகளாய்
ரசித்த சேஷ்டைகளும்
குழந்தை முகமும்
தாண்டி சென்ற மனிதர்கள்
மீதான கோபமும்
பாவமென இரக்கப்பட்ட நானும்...//

மனநலம் அற்றவர் கவிதைகளுக்கு
ஜீவனும் குறைத்துவிட்டார் கவிதை வரிகளை...

வாழ்க வளமுடன்,
வேலன்

ஜீவா said...

thanks Velan