மனிதன் விற்பனைக்கல்ல

மானுடமே
எங்கே விற்றாய் மனிதத்தை
என்ன விலைக்கு வாங்கினாய்
தேவையில்லை எனில்-மனிதனை
மலம் தின்னும் புழுக்களாய்
நடத்திடும் காட்டுமிரண்டிதனத்தை

இன்னும் இன்னும் ஒளிகிறாய்
வாழ்வின் கடைசி நிமிடங்களின்
மரண பயத்தை விட
ஏழை மனிதரை கண்டால்

பரிதவித்தபடி
பிச்சை கேட்கும் வயதானவரிடம்
ஒற்றை நாணயம் மறுக்கிறாய்-ஆனால்
ருபாய் தாள்களை வீசுகிறாய்
ஆடம்பரத்தின் எச்சங்களுக்காக

ஒப்பாரி இட்டழும் பெண்ணிண்
ஆடை கலைந்தலையும்
வெட்கமின்றி விரசமாய் பார்க்கிறாய்
சோகமென்று முகமுடி அணிந்தபடி

மரணம் நடந்த வீட்டில்
பிணத்துக்கு அருகில் ஊர்வம்பு
காபி இல்லையெனும் மனக்குமுறலோடு

எதையும் அருவெருப்பதில்லை
காசு வருமெனில்-தள்ளுபடியில்
துணையின் அந்தரங்கங்களும் விற்பனைக்கு

வெளிச்சத்தை விட
இருளின் மறைவு பிடித்ததாலயே
இருட்டறையின் சுவர்களுக்குள் வாழ்க்கை

மானுடமே
இதய அறைகளை சுத்தமாக்கி
ஆணியடித்து பலகை மாட்டிடு
"மனிதன் இங்கே விற்பனைக்கல்ல" என .....

குறிப்பு:இக்கவிதை பல வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டது,கவிதைக்காக மட்டுமே இப்பொழுது பிரசுகரிக்கப்பட்டது .இப்பொழுது மனிதர்களை மிகவும் நேசிக்கிறேன்

6 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\பரிதவித்தபடி
பிச்சை கேட்கும் வயதானவரிடம்
ஒற்றை நாணயம் மறுக்கிறாய்-ஆனால்
ருபாய் தாள்களை வீசுகிறாய்
ஆடம்பரத்தின் எச்சங்களுக்காக\\

மிக அருமை ...

சாட்டையடி எறுமைகளின் முதுகில், உறைக்குமா, சுறனை மறத்து போயிருக்குமா அல்லது அப்படி ஒன்றே அறியாதிருக்குமா ...

நட்புடன் ஜமால் said...

\\மரணம் நடந்த வீட்டில்
பிணத்துக்கு அருகில் ஊர்வம்பு
காபி இல்லையெனும் மனக்குமுறலோடு
\\

திருந்துங்க மக்கா

மக்கு - ஆ

நட்புடன் ஜமால் said...

\\எதையும் அருவெருப்பதில்லை
காசு வருமெனில்-தள்ளுபடியில்
துணையின் அந்தரங்கங்களும் விற்பனைக்கு
\\

:( :( :(

நட்புடன் ஜமால் said...

\\இப்பொழுது மனிதர்களை மிகவும் நேசிக்கிறேன்\\

அருமை ஜீவன்.

அருமையான ஜீவன்.

வேலன். said...

\\மரணம் நடந்த வீட்டில்
பிணத்துக்கு அருகில் ஊர்வம்பு
காபி இல்லையெனும் மனக்குமுறலோடு
\\

நடைமுறையில் நடக்கும் உண்மை.
பிணமும் மறுபிறவிக்கு அஞ்சும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பரிதவித்தபடி
பிச்சை கேட்கும் வயதானவரிடம்
ஒற்றை நாணயம் மறுக்கிறாய்-ஆனால்
ருபாய் தாள்களை வீசுகிறாய்
ஆடம்பரத்தின் எச்சங்களுக்காக

அருமை

மரணம் நடந்த வீட்டில்
பிணத்துக்கு அருகில் ஊர்வம்பு
காபி இல்லையெனும் மனக்குமுறலோடு//

ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.