தொலைத்த தோழமைகள் !

எங்கே
எப்படி தேடுவது தோழமைகளை!
வயது சிறியவனாய்
மனதின் முதிர்ச்சியால்
தோழமைகளை தொலைத்து விட்டேனா !

வார விடுமுறை நாட்களில்
யாருமின்றி தனித்து இருக்கையில்
தோழமையை தேடுவதுண்டு
தனிமை துரத்திடும் பயத்தில்!

சின்ன சின்ன துக்கங்களை
சத்தமிடும் சந்தோசங்களை -இறக்கிட
தோழமையை தேடுவதுண்டு
கண்களில் நட்போடு !

திரைப்பட காட்சியாய்
எனை சுற்றி சத்தமிடும்
எப்பொழுதும் சார்ந்தே இருக்கும்
தோழமையை தேடுவதுண்டு
அசட்டுதனமாய் சிரித்தபடி

தோழமையை தொலைத்ததற்கு
எனக்கான காரணங்கள்
ஒத்துபோவ முடிவதில்லை
விருப்பமில்லா உன் இசைவுகளுக்கு

வெறுத்திடும் கிரிக்கெட்
தரம் கெட்ட திரைப்படம்
பணம் கொண்டு
மனிதனை நடத்திடும் மனதை
தோள்மீது கைகள் போட்டு
முதுகில் மலம் பூசுதலை
தனித்துவம் ஏதுமின்றி
கூட்டத்தின் புள்ளியாய் வாழ்தலை
நட்புக்குள் ஆத்திரமாய்
பொறாமை கொள்ளும் கண்களை

தோழமையை இன்றி இருத்தலுக்காக
சின்னதாய் வருத்தமுண்டு
குறையென்று கலங்கியதில்லை-வேண்டுமானால்
நீ வருத்தபட்டு கொள்
எனை விடவும்
உன்னை நேசிக்கும் தோழனை
தொலைத்து விட்ட உனக்காக...


11 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\"தொலைத்த தோழமைகள் !"\\

தலைப்பிலேயே வலி

நட்புடன் ஜமால் said...

\\வார விடுமுறை நாட்களில்
யாருமின்றி தனித்து இருக்கையில்
தோழமையை தேடுவதுண்டு
தனிமை துரத்திடும் பயத்தில்!\\

5-ஆம் வகுப்பு படிக்கும் போது இதனை வெகுவாக அனுபவித்துள்ளேன்

நட்புடன் ஜமால் said...

\\தோழமையை இன்றி இருத்தலுக்காக
சின்னதாய் வருத்தமுண்டு
குறையென்று கலங்கியதில்லை-வேண்டுமானால்
நீ வருத்தபட்டு கொள்
எனை விடவும்
உன்னை நேசிக்கும் தோழனை
தொலைத்து விட்ட உனக்காக...\\

மிகவும் அருமை தோழா

வேலன். said...

தொலைத்த தோழமைகள் - பழைய தோழமைகளை நினைவுப்படுத்துகிறது.
நன்றி தோழரே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

gayathri said...

rompa nalla iruku pa kavithai

அன்புடன் அருணா said...

//எங்கே
எப்படி தேடுவது தோழமைகளை!
வயது சிறியவனாய்
மனதின் முதிர்ச்சியால்
தோழமைகளை தொலைத்து விட்டேனா !//

எவ்வ்ளோ உண்மையான வரிகள்....
அன்புடன் அருணா

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனிதனை நடத்திடும் மனதை
தோள்மீது கைகள் போட்டு
முதுகில் மலம் பூசுதலை
தனித்துவம் ஏதுமின்றி
கூட்டத்தின் புள்ளியாய் வாழ்தலை
நட்புக்குள் ஆத்திரமாய்
பொறாமை கொள்ளும் கண்களை//

மிக மிக வலிக்கும் உண்மை,

அழகாய் வார்த்திருக்கிறீர்கள்

ஜீவா said...

நன்றிகள் பல என் புதிய (ஜமால் ,வேலன் ,காயத்ரி ,அருணா )தோழமைகளுக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

தோழமை தொலையவில்லை, தொடரும்.

iskcon said...

தொலைத்த தோழமைகள் கவிதை என் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது

iskcon said...

தொலைத்த தோழமைகள் கவிதை என் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது