காதலித்ததால் கவிதைகள்-1நீயே
ஞாபகத்தில் வருகிறாயடா
துப்பட்டா நழுவும் சமயங்களிலும்..

கவிதையும்
காதலும் ஒன்றடா
அதிகமாய் பொய் சொல்வதில்..

இயல்பான விஷயமானது
உன் வாசமடிக்கும் தலையணையில்
தலை வைக்காமல்
முகம் புதைத்து உறங்குவது..

உந்தன்
ஓராயிரம் வார்த்தைகளை விட
மவுனங்களே என்னுள் சலனங்களாய் ..

உன்னைவிட உயர்ந்தவன் நான்
உடல்நிலை சரியில்லாத நேரங்களில்
பணிவிடை செய்வதில் ...

எங்கே கற்றாயடி தோழி
நான் பார்க்காத நேரங்களில்
எனை பார்க்கும் வித்தையை ...

2 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\உந்தன்
ஓராயிரம் வார்த்தைகளை விட
மவுனங்களே என்னுள் சலனங்களாய் ..\\

மிக அருமை.

வார்த்தைகளை விட மவ்னங்களே சக்தி வாய்ந்தது ...

நட்புடன் ஜமால் said...

\\எங்கே கற்றாயடி தோழி
நான் பார்க்காத நேரங்களில்
எனை பார்க்கும் வித்தையை ...\\

தான் நோக்கின் நிலம் நோக்கும் நோக்காகால் ...

சரியா ஞாபகம் வர்ல ...